Top News

இஸ்லாமிய விழுமியங்களை பின்பற்றி வாழ்ந்து மற்றவர்களையும் வாழச்செய்து மறுமையில் ஈடேற்றம் பெறுவோமாக.



தியாகத்தை நினைவு கூரும் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உள்ளங்களின் துயரகன்று பிரிவினையின்றி ஒற்றுமையுடன் இஸ்லாமிய வழிமுறையில் நிம்மதியாக வாழ்வதற்கு ஏக இறைவனை இருகரமேந்தி பிரார்த்திப்பதாக புனித மக்கமா நகரில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும் இலங்கைத் திருநாட்டில் நிம்மதியாக இன, மத பேதங்களின்றி சகோதரத்துவத்துடன் ஒரு தேச மக்களாக வாழ்வதற்கும் உலக முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்விற்கும் இன்நன்நாளில் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக. அத்தோடு முன்மாதிரி மிக்க சமூகமாக இஸ்லாமிய விழுமியங்களை பின்பற்றி வாழ்ந்து மற்றவர்களையும் வாழச்செய்து மறுமையில் ஈடேற்றம் பெறுவோமாக.    

இறைதூதர் இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும் அரப்பணிப்பையும் உறுதியையும் நினைவுகூரும் திருநாளாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் அமைகிறது. அத்தியாக உணர்வை நினைவில் நிறுத்தி எமது அன்றாட செயற்பாடுகளை சீர் செய்து கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. 

இத்திருநாளில் தீய எண்ணங்களின்றி தூய நற்செயல்கள் மூலம் இறைநேசர்களாக செயற்பட்டு ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவதற்கும் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் ஹாஜிகளின் ஹஜ் இறை ஏற்றம் பெற்றதாக அமைவதற்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதற்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு தியாகத் திருநாளை கொண்டாடும் அனைத்து ஈமானிய நெஞ்சங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் 'தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்'.  

(அகமட் எஸ். முகைடீன்)
Previous Post Next Post