Fast Lanka Media Network தொடர்ந்து செவ்வனே இயங்குவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் - கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியூதீன்

Fast Lanka Media Network தனது முதலாவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. கிழக்கு மண்ணில் பொத்துவில்லைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த ஊடக வலையமைப்பு கடந்த காலங்களில் எந்தவிதமான பக்கச் சார்புமின்றி நடுநிலை நின்று செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரித்து வருவது எனக்கு பெருமை தருகின்றது. 
செய்திகளை சுடச்சுடத் தருவதில் இந்த வலையமைப்பு முன்னணியில் இருக்கிறது என்பதை நான் நன்கறிவேன். 

அண்மைக் காலங்களாக செயற்பட்டு வரும் சில இணையத்தளங்கள் பொய்யான செய்திகளையும், சோடிக்கப்பட்ட கற்பனைக் கதைகளையும் பிரசுரித்து வருவது வேதனையானது. 

ஊடக தர்மத்துக்கு மாற்றமாக இயங்கும் சமூக வலைத்தளங்களும், இணையத்தளங்களும் தமது பாதையை சரிப்படுத்துவதற்கு பாஸ்ட் லங்கா இணையத்தளம் போன்றவைகளை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகின்றேன்.

இந்த வலைத்தளம் தொடர்ந்து செவ்வனே இயங்குவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.      
| றிசாத் பதியூதீன் (பா.உ)
கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சர்,
தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் |
Previous Post Next Post