சவால்களை முறியடித்து வெற்றி பாதையில் வீறுநடை போட வாழ்த்துகின்றேன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொத்துவில் அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீதின் ஆசிச் செய்தி

பல்வேறுபட்ட தடைகளையும் தாண்டி ஒரு வருட பூர்த்தியைக் கொண்டாடும் Fast Lanka ஊடக வலையமைப்பிற்கு இவ்வாசிச் செய்தியை வழங்குவதில் மகிழ்சி அடைகின்றேன்
இன்று உலகில் பாரிய சவாலுக்கு உள்ளாகியிருக்கும் ஊடகத்துறையை அச்சமின்றி நடாத்திச் செல்வது மிகக் கடினமான பணியாகும். 

இச்சவாலை எதிர்கொண்டு பல இன்னல்களுக்கு மத்தியில் ஊடகப் பணியை பக்கச் சார்பின்றி வழங்கி வருகின்ற இவ்வூடக வலையமைப்பின் சேவை பாராட்டத்தக்கதாகும். 

குறிப்பாக துடிப்பான இளைஞர்களினால் நடாத்தப்படும் இவ்வூடக வலையமைப்பின் மூலம் சுடச்சுட செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

இவ்வூடக வலையமைப்பு சவால்களை முறியடித்து வெற்றிப் பாதையில் வீறுநடை போட வாழத்துகின்றேன்.

| ஏ.எம்.அப்துல் மஜீத்,
அமைப்பாளர்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி,
பொத்துவில் தொகுதி. |
Previous Post Next Post