FastLanka.lk இணையத்தளம் தனது சேவையில் ஒரு வருடத்தை பூர்த்தி செய்வது மகிழ்ச்சிக்குரியதாகும் விடிவெள்ளி பிரதம ஆசிரியரின் ஓராண்டு ஆசிச் செய்தி

ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர் குழுவொன்றினால் நடாத்தப்படும் இந்தச் செய்தித்தளம் பல்வேறு விதமான உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சுமந்து வருகின்றது.
பிராந்திய செய்தி இணையத்தளங்கள் அதிகரித்துள்ள போட்டிமிக்க சூழலிலேயே இந்த இணையமும் தனது பணியை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த ஒரு வருட கால சேவையைப் போன்று எதிர்காலத்திலும் ஊடக தர்மங்களை மீறாத வகையிலும் ஊடக ஒழுக்க கோவையை பின்பற்றியும் Fastlanka.lk இணையத்தளம் தனது ஊடகப் பணியை முன்னெடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்கின்றேன்.

| எம்.பி.முகம்மட் பைறூஸ்
விடிவெள்ளி பிரதம ஆசிரியர் |
Previous Post Next Post