News Update :
Powered by Blogger.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் மிக முக்கியமானதாகும்

தனியார் துறை கல்வி நிறுவனங்களில் முக்கியமாக கற்பித்தலின் தரத்திற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முகியத்துவம் கொடுக்கப்படும்
தனியார் துறை நிறுவனங்களில் கல்வி கற்பிக்கப்படுதலின் பொழுது இரண்டு முக்கியமான விடயங்களாக கற்பித்தலின் தரமும் மாணவர்களின் ஒழுக்கத்துடன் களந்த பழகவழக்கங்களும் கருத்தில் கொள்ளப்படும்.

ஒழுக்கம் இல்லாத கல்வியானது எந்த அடைவுகளையும் தராது. அந்த அடிப்படையிலே இஸ்லாத்தின் பார்வையிலும் கூட ஷைத்தான் எனப்படுபவன் பெரிய அறிவாளியாக இருந்தும் ஒழுக்கமும் இறைகட்டுப்பாடும் இல்லாத காரணத்தினால் அல்லாஹ்வாலும் மனித சமூதாயத்தினாலும் சபிக்கப்பட்டான் என இஸ்லாம் மார்க்கத்தில் முக்கிய விடயமாக கூறப்படுகின்றது.

அறிவு மட்டும் ஒருவருக்கு உயற்சியினை கொடுப்பதில்லை. ஆனால் மாறாக மாணவனுடைய ஒழுக்கமும் அவனுடைய நன் நடத்தையுமே அவனுடைய உயற்சியினை சமூதயத்தில் எடுத்துக்காட்டுகின்றது என இலங்கையில் முன்னணி தனியார் கல்வி நிறுனங்களில் ஒன்றாக செயற்பட்டு வரும் BCAS தனியார் பல்கலைகழகத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் கடந்த 6.03.2016 ஞாயிறுக்கிழமை மட்டக்களப்பு கிரீன் காடன் ஹோட்டலில் இடம் பெற்ற மானவர்களுக்கான கருத்தரங்கில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கியமாக எமது நாட்டில் மாணவர்கள் உயர் கல்வி ரீதியாக எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு கலந்துரையாடல் மூலமாக தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் இலங்கை பல்கலை கழக மாணியங்கள் ஆணைகுழுவின் தலைவராகவும் கொழும்பு பலகலைகழகத்தில் இரண்டு முறைகள் உப வேந்தராக கடமையாற்றியவருமான பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்பேகம உடனான பகற்போசன கலந்துறையாடல் எனும் தலைப்பில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய BCAS கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்.,

மேற்கத்தைய மாணவர்கள் கற்கின்ற கலாசார ஒழுக்கத்தினை இங்கு இறக்குமதி செய்யும் தேவைப்பாடு எமக்கில்லை. மாறாக நவீன உலகத்தின் தேவைபட்டினை கருத்தில் கொண்டு வெளிநாட்டு கல்வி முறையினை மட்டும்தான் நாங்கள் பின்பற்றி உலக நாடுகளுடன் போட்டியிடக் கூடிய வகையில் எமது மாணவர்களுக்கான கல்வியினை எமது நாட்டில் ஏற்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும்.

ஆனால் எமது மாணவர்கள் பின் பற்றுகின்ற எமது கலாச்சாரத்திற்கும் ஒழுக்க கட்டுப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் வெளி நாட்டு கலாசாரத்தினை இங்கு இறகுமதி செய்து பின்ற்றும் தேவைப்பாடு எமக்கில்லை.

அதேவேலையில் இப்பொழுதுள்ள மாணவர்களும், சந்ததிகளும் மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கப்பால் மானவர்களுடைய தகவல்களும், தேடல்களும் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.

அனைத்து மாணவர்களுடைய உள்ளங்கைகளிலும் உலகம் சுருங்கிக் கிடக்கின்றது. நவீன செல்போன்கள் மூலமாக உலகத்தில் இடம்பெறக் கூடிய அனைத்து விடயங்களை உடனுக்குடன் வீட்டிலிருந்தவாரே மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர்.

அதே போன்று உலகத்துடன் நேரடி தொடர்பினை அனைத்து மாணவர்களும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆகவே மாணர்களின் மனோ நிலை அல்லது இயல்பான பலவீனங்களை பயண்படுத்தி வர்த்தக உபாயமாகவும் மாற்றுகின்ற துரதிஸ்ட்டமும் இந்த நாட்டில் இருக்கின்றது.

அதற்குத்தான் பேராசியர் சானிக்கா உரையாற்றும் பொழுது BCAS கல்வி நிறுவனத்தில் பேனப்படுகின்ற கற்பித்தல் திரனையும், மாணவர்களின் விடயத்தில் பேனப்படுகின்ற ஒழுக்க கட்டுப்பட்டினையும் கருத்தில் கொண்டே BCAS CAMPUS இல் தான் இணைந்து கொண்டதாக தெரிவித்தார்.

ஆகவே நான் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புவதானது தனியார் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியினை தொடர எமது மாணவர்களை நாங்கள் தெரிவு செய்கின்ற பொழுது கற்பித்தல் திரனையும், ஒழுக்க கட்டுபாட்டினையும் முக்கியமாக கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும். அந்த வகையிலே BCAS CAMPUS ஆனது இரண்டு விடயங்களும் அதி கூடிய முக்கியத்துவம் கொப்டுத்து இலங்கையில் செயற்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் முக்கிய கல்வி நிறுவனமாக தொழில்பட்டு வருகின்றது.

ஆகவே இந்த விடத்தினை அடிப்படையாக கொண்டே BECAS CAMPUS ஆனது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் என்ற இரண்டு விடயங்களும் மிகவும் முக்கியமானது என்ற ரீதியிலே கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதனை அடிப்படை இலட்சியமாகவும் BECAS Campus செய்து வருகின்றது. அதனோடு சேர்த்து எமது இளைஞர்கள் மிகவும் நேர காலத்தோடு அவர்களது பட்டப்படிப்பினை முடித்து வெளியேற வேண்டும் என்ற அடிப்படை கோட்பாடிலேயே எமது நிறுவனம் தொழிற்படும் நிறுவனாமாகவும் காணப்படுகின்றது..

அந்த வகையிலே எமது பெண் பிள்ளைகள் காலம் தாழ்த்தி பட்டப்படிப்பினை முடிப்பதினால் அவர்கள் எதிர் நோக்குகின்ற சமூகபிரச்சனைகளையும், அவர்களுக்கென்று இருக்கின்ற பிரத்தியேகமான பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு அரசாங்க பல்கலைகழகமானாலும் சரி தனியார் பல்கலைகழகமானாலும் சரி முடியுமான வரை பெண் பிள்ளைகள் தங்களது முதலாவது பட்டப்படிப்பினை மிக விரைவில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் .

அதற்காக எமது BCAS நிறுவனமானது தகுந்த கற்கை நெறிகளை நான் மேற்கூரிய விதிமுறைகளுக்கு அமைவாக நடாத்தி வருக்கின்றது.

இதனடிப்படையில் அன்மையில் ராவய பத்திரிகையில் நான் வாசித்த ஒரு செய்தி உணர்த்தியதாவது இலங்கையின் உயர் கல்வியினை நோக்குகின்ற பொழுது கடந்த முப்பது வருடங்களாக இலங்கையின் பல்கலைகழகங்களில் இருந்து செய்யப்பட்ட ஆய்வுகள் எவையும் வெளி நாட்டு புதிஜீவிகளை கவருகின்ற அளவிற்கு தரமாக இல்லை என்பதாகும். இது எதனை காட்டுகின்றது என்றால் எமது கல்வி முறையில் பாரிய ஓட்டை, உடசல்கள் இருக்கின்றது என்பதனை தெளிவாக்குகின்றது.
எமது நாட்டில் கற்பிக்கப்படுகின்ற கல்வி நடைமுறையானது எவ்வாறு இருக்கின்றது என்றால் மனப்பாடம் செய்வதும், ஒப்புவித்தலுமாகவே காணப்படுகின்றது. பரீட்சையும் அதனை தழுவியதாகவே இருக்கின்றது. இறுதியில் அதன் விளைவானது எவறாலும் அதன் பலனை அடைய முடியாமல் போகின்ற நிலைமைக்கு தள்ளப்படும் நிலையே காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஆய்வுகள், ஆராய்ச்சிகள், பிரயோகிப்புக்கள், கண்டுபிடிப்புக்கள் என எவையும் அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எந்த சிறு விடயமாக இருந்தாலும் அதில் பிரயோகிக்கும் தன்மை இருந்தால் மட்டுமே அதிலிருந்து புதிய விடயங்களை உறுவாக்க முடியும் என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.

நான் எப்பொதும் கல்வி பற்றிய விடயங்களை பேசுகின்ற பொழுது மாணவர்களுக்கு கூறுகின்ற முக்கிய விடயமானது கல்வியில் இரண்டு விடயங்களில் மிகவும் முக்கிய கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

அது இடை நிலைகல்வி, பாடசாலைக்கல்வி அல்லது உயர் நிலை கல்வியாக இருக்கலாம். நான் ஏற்கனே கூறியதின் அடிபடையில் ஒன்று கிரகிப்பு மற்றையது அதனை பிரயோகிப்பதாகும். ஆகவே இந்த கிரகிப்பு பிரயோகிப்பும்  இல்லாத எந்த கல்வியும் எவருக்கும் எந்த பிரயோசனத்தினையும் தாராது என்பதே உண்மையான விடயமாக இருக்கின்றது.

அந்த அடிப்படையிலேயே எமது BCAS CAMPUS நிறுவனமானது 17 வருடங்களுக்கு முன்பு மிகவும் எழிமையான முறையில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் அடிப்படை குறிக்கோளான மாணவர்களுக்கு கிரகிப்பும் பிரயோகிப்பும் கலந்த கல்வியினை மிகத் தரமான கற்பித்தல் திரனுடனும் ஒழுக்க கட்டுப்பாட்டுனமும் கொடுக்க வேண்டும் என்ற எங்களுடைய விடாமுயற்சியும் தொடர்ந்தேர்சியான செயற்பாடும் இன்று எமது BCAS CAMPUS கல்வி நிறுவனமானது இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் கால்பதிதக்க காரணமாக மைந்திருக்கின்றது. அந்த வகையிலேதான் எமது கல்வி நிறுவனத்தில் நாட்டில் மிக முக்கிய கல்விமானக இருக்கின்ற பேராசியர் சானிக ஹிரிம்பேகம பேராசிரியாரக கடமையாற்றும் அளவிற்கு எமது கல்வி நிறுவனாம BCAS CAMPUS முன்னேரியுள்ளது எனத் தெரிவித்தார்.
-AHMED IRSHAD MOHAMED BUHARY-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

comments powered by Disqus