புதிய உத்தேச தேர்தல் முறை

வாக்களிப்பு முறை மூலமே மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றம், மாகாண சபை,பிரதேச சபை போன்றவற்றிற்கு தெரிவுசெய்யப்படுவது வழமையான முறையாக உள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளாக  இப்பிரதிநிதிகளின் அவர்களின் சேவைத்தன்மையின் சமத்துவத்தன்மை என்பது ஒரு கேள்விக்குறியே...
தேர்தல் காலங்களில் அவர்களின் சமூகசேவை, சமூகப்பற்று, கல்வித்தகமை,
மார்க்கப்பற்று என்பவற்றிற்கு பதிலாக அவர்களால் வழங்கப்படும் குறுகிய கால தேர்தல் நிவாரணங்களுக்காகவே வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலமைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அடிமையாக்கப்பட்டுள்ளனர்...

இதன் காரணமாகவே பாராளுமன்ற,மாகாண,பிரதேச சபைகளுக்கு ஆளுமையற்ற,வினைத்திறனற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் உட்செல்கின்றனர்...

எனவே வாக்களிப்பு முறையை தவிர்த்து ஒரு சிறுமாறுதலாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்,சர்வதேச அரசியல் வல்லுனர்கள், அரசியல் புலமைசார் நிபுணர்களின் உதவியுடன் பாராளுமன்ற,மாகாண,பிரதேச சபை உறுப்பினர் பதவிகளுக்காக நேர்முகப்பரீட்சை வைக்கப்பட்டு சிறந்ந கல்வித்தகமை,மொழிசார்திறன்,ஆளுமைமிக்க பேச்சாற்றல்,வினைத்திறனான தூரநோக்கு சிந்தனை, பொருளாதார
கல்வி அரசியல் போன்ற காரணிகள் பற்றிய ஆழமான அறிவு,எண்ணக்கரு அடிப்படையில் அவ் உயரிய சபைகளுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுமாயின் புதிய மாற்றத்தை நோக்கி நகர முடியும்.. இதனை அடிப்படையாக வைத்து ஆரோக்கியமான
தேசிய அரசையும் நிறுவலாம்
-MA.Jeswath
Faculty of Animal Science
Uwa Wellassa University-
Previous Post Next Post