எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு முடிவு-நடுத்தர மக்கள் அவதி

எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில இதனை கூறியுள்ளதுடன், இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் எரிசக்தி அமைச்சுகளால் பின்னர் தீர்மானிக்கப்படும் என கூறியுள்ளார். 

இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்படப்போவது நடுத்தர வர்க்கத்தினரே, தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு தங்கள் பொரளாதார வசதிக்கேற்ப சிறிய வாகனங்களை பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட வாழ்வியலில் இந்த விலை அதிகரிப்பானது பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பது நிதர்சனமானது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு இவ்வாறு வாழ்க்கைச் செலவை அதிகரிக்க முயற்சிப்பது மிகவும் கண்டிக்க தக்க செயல் என பல தரப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Post Next Post