பொத்துவில் செவிப்புலனற்றோர் சங்கத்தினால் ரமழான் பொதிகள் வழங்கி வைப்பு(படங்கள்)

பொத்துவில் செவிப்புலனற்றோர் சமூக சேவை அமைப்பின் (PADSS) உத்தியோகபூர்வ காரியாலயம் பொத்துவில்  கப்புபனைமரத்தடி வீதியில் நேற்று மாலை 4 மணியலவில் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு விசேட அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் அப்துல்  வாஸித் அவர்களும் அதிதிகளாக பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு, கிராம அபிவிரித்திப்பிரிவுகளின் அதிகாரிகளும் மற்றும்பொதுச்சுகாதார உத்தியோகத்தர் அப்துல்  மலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“88 ஆண்கள்,83 பெண்கள் அடங்கலாக 171 நபர்கள் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். எமது சங்கம் நடாத்தும் விசேட பாடசாலையில் 22 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

எமது மாணவர்களுக்கு பிரேத்தியோகமான ஒரு பாடசாலையின் தேவை இருப்பதுடன் பாடசாலைக்கான கதிரை, மேசைகள் அத்தியவசிய தேவையாக காணப்படுகின்றது” 

என சங்கத்தின் தலைவர் ஏ. சீ பெளசீ முகைதின் தனது உரையில் தெரிவித்தார்.
இத்தேவைகளை செவிமடுத்த முன்னால் தவிசாளர் அவர்கள் “பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு இலட்சம் ரூபாவினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்ததுடன் எதிர்காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும்”தனது உரையில் தெரிவித்தார்.

இருதியில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களுக்கு 2000 ரூபா பெருமதியுடைய ரமழான் பொதிகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது
பொத்துவில் செவிப்புலன்ற்றோர் சமூக சேவை அமைப்பின்  எதிர்காலத்திட்டங்கள் வெற்றியடையும் வகையில் அவர்களுக்கு நீங்களும் உங்கள் உதவிக்கரங்களை நீட்டவிரும்பினால்
தொடர்பு கொள்வதற்கு :

சீ.எம் பெளசீ முகைதீன் – தலைவர்எ
ஸ். எம் நாசர் – செயலாளர்
ஏ.கே.எம் நஜிஹாத் – பொருளாலர்
வங்கி கணக்கு
கிராமிய அபிவிருத்தி வங்கி
பொத்துவில் கிளை
 வங்கி கணக்கு இல 6 0 8 0 1 1 5 0 0 0 1 9

-இர்சாத் ஜமால்தீன்-
Previous Post Next Post