Top News

மட்டக்களப்பில் வானொலி அறிவிப்பாளர் பயிற்சி நெறி ஆரம்பம்!

ஊடகக் கற்கைநெறிகளை வழங்கிவரும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் வானொலி அறிவிப்புத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஆறுமாத கால டிப்ளோமா பாடநெறியொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தின் கிளையில் இவ்வானொலி அறிவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

தகவல் ஊடக அமைச்சின் அனுசரணையுடன் இந்திய இதழியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பில் இக்கற்கை நெறிகள் நடைபெறவுள்ளன.
கற்கை முடிவில் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் ஊடக நிறுவனங்களில் உள்ளக பயிற்சியை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கை நிறுவகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

ஊடகத் துறையில் நீண்டகால அனுபவமிக்க சிரேஷ்ட அறிவிப்பாளர்களால் விரிவுரைகள் நடாத்தப்படும். களப் பயிற்சிகளுடன் கூடிய இப்பயிற்சி நெறியானது செய்முறை பயிற்சிகள், குரல் வளமூட்டல், கலையக செயற்பாடுகள், செய்தி மற்றும் நேர்காணல், நிகழ்ச்சித் தொகுப்பு, ஒலி தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம். 065 2222832, 0712164061, 0758265824.

இதுதவிர புதிய டிப்ளோமா கற்கைநெறிகளான  புகைப்படக்கலை, திரைப்படத்துறை, தொலைக்காட்சி மற்றும் வீடியோ தயாரிப்பு, குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பு, பத்திரிகைத் துறை மற்றும் செய்தி சேகரிப்பு அகியவற்றுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.
-எஸ்.பிரவீணா-
Previous Post Next Post