Top News

மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் அக்கரைப்பற்று வைத்தியசாலை வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணசபையின் ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அக்கரைப்பற்று வைத்தியசாலை வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம். ஏ. றாஸிக் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச சபை, ஆயுர்வேத மருந்தகம், சமுர்த்தி அபிவிருத்தி வங்கி, முஹம்மதியா மருந்தகம், ஆயுர்வேத வைத்தியசாலை உட்பட முக்கிய அரச  நிறுவனங்களை ஊடறுத்துச் செல்லும் இவ்வீதி பிரதேசத்தின் முக்கிய வீதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அக்கரைப்பற்று பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி .பர்சாத், ரீ.எம். ஐயூப்,  மௌலவி எச்.ஐ.எல் சஹாப்தீன், பிரதேச சபை செயலாளர் எம். எல். இர்பான், கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் றிப்கான், பிராந்திய ஆயுர்வேத வைத்திய அதிகாரி டாக்டர் நபீல்,  சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.சுசாந்தன், முஹம்மதியா வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் அன்வர், பள்ளிக்குடியிருப்பு உப தபால் அதிபர் யு எல் நவாஸ் ஆகியோரால் கல்வைக்கப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

-நூருல் ஹுதா உமர்-

Previous Post Next Post