பதுளை பெருந்தோட்டங்களில் இராணுவம் - அனுமதிக்க முடியாது என்கின்றார் வடிவேல் சுரேஸ்

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலமையை சாதகமாக பயன்படுத்தி தோட்ட நிர்வாகத்தினர் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சிறிய பிரச்சனைகளுக்கும் தோட்ட நிர்வாக பிரச்சனைகளுக்கம்  தீர்வுகான இராணுவத்தினரை பெருந்தோட்டகளுக்கு உள்வாங்கி சில  மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.
சில தோட்ட அதிகாரிகளின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய செயற்படக் கூடாது. இவ்வாறான செயற்பாடு ஒன்று பதுளை மாவட்டம் லெஜர்வத்த தோட்டம் புதுமலை பிரிவிலும் உடபுஸ்ஸல்லாவ ஹோல்டிமார்  தோட்டத்திலும் பதிவாகி உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்த முறைபாட்டுக்கு பதுளை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலியக்கார அவர்களுக்கு அறிவுருத்தியுள்ளேன். இனி இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் பயமுறாமல் அச்சம் இன்றி வாழ்வதற்கும் உரிய நடவடிக்கள் எடுக்கபட்டு வருகின்றன.

இனி தோட்டங்களுக்குள் இராணுவத்தினர் உரிய சரியான காரணம் இன்றி செல்ல அனுமதிக்கபட மாட்டாது. மக்கள் அச்சம் இன்றி இருக்கலாம் என்று கூறுகின்றார் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் அவர்கள்

பதுளை லெஜர்வத்த தோட்டத்தின் நிர்வாகத்தினர் தோட்ட பிரச்சனைக்கு பொலிஸ் முiறாடு மூலம் தீர்த்தக் கொள்ளாமல் இராணுவத்தினர் அழைக்கபட்டதினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மக்கள் இராஜாங்க அமைச்சருக்கு முறைபாடு செய்ததற்கு அமைய இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெவிக்கையில்

இந்த நாட்டில் அவசரகால சட்டம் அழுலில் இருக்கும் இவ்வேலையில் இராணுவத்தினர் எங்கும் செல்லலாம். அவரது பணியை தொடராலாம். இருந்தும் தீடீர் என்று தோட்டங்களுக்கு சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் செல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு செல்லும் போது மக்கள் அச்சம் அடைகின்றனர். பெருந்தோட்ட மக்கள் எந்த விதமான நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் அல்லர். பெருந்தோட்ட செயற்பாடுகள் அனைத்தும் எந்தவிதமான குழப்பங்களும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இரானுவத்தினர் தோட்டங்களுக்கு செல்வது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூராக இருக்கும். மக்கள் குழப்பம் அடைவர். வேலை நிறுத்தங்கள் ஏற்படும். பெருந்தோட்டங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களையும் அச்சுருத்தி உள்ளனர். பதுளை மாவட்டத்தை பொருத்த வரையில் தோட்டங்களில் இரானுவ முகாம்களை அமைப்பதுற்கு பலர் பலர் பல வருடங்களாக முயற்சித்து வருகின்றனர் அதனை அந்தந்ந காலத்தில் தடுத்தி நிறுத்தி இருக்கின்றேன்.

தற்போது இவ்வாறான செயற்பாடுகளினால் மீண்டு;ம் அந்த நிலை ஏற்படாமல் இருக்க நான் கவனமாக இருக்கின்றேன் . இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமரிடமும் பாதுகாப்பு சபையுடனும் பாராளுமன்றத்திலும் முறையிடவுள்ளேன். பெருந்தோட்ட மக்கள் இந்த விடயம் தொடர்பில் பயப்பட வேண்டாம். இவ்வாறான நிலை எங்கும் ஏற்பட்டால் உடனடியாக என்னுடன் தொடர்பு கொள்வும் என்று கூறினார்.
-P.Thirughanam-
Previous Post Next Post