வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு பைசல் காஸிமின் பதில்கள்

சுகாதார அமைச்சர் பைசல் காசிம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்-சிங்கள பகுதிகளை புறக்கணித்து அவரது பகுதியில் மட்டும் சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்கின்றார் என்றொரு குற்றச்சாட்டை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொய்க்குற்றச்சாட்டு ஒன்றை ஓரிரு நாட்களுக்கு முன் முன்வைத்தது.



பிரதமர் உற்பட அமைச்சர்கள் அனைவருக்கும் அவர்கள் கடிதங்கள் மூலம் அவர்கள் இதைத் தெரியப்படுத்தினர்.நன்றாகத் தேடிப் பார்க்காது அவர்கள் முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் இராஜாங்க அமைச்சர் பைசல் கீழ் உள்ளவாறு பதிலளித்த்துள்ளார்.

குற்றச்சாட்டு-01 : 

2017/2018 வருடத்திற்கான கிழக்கு மாகாணத்தின் சுகாதார நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊடாக ஒதுக்கீடுகள் ஒதுக்கும் போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கு மூன்று மடங்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கும் இரண்டு மடங்கும் பைசால் காசிம் இராஜாங்க அமைச்சர் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை பிரிவிற்கு ஒதுக்குதல் ஊடாக கிழக்கு மாகாணத்தினுள் வளங்கள் பகிர்ந்தளித்தல் பாரிய முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதில்-01:  

2015ஆம் வருடத்திலிருந்து நான் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் பிரதி அமைச்சராகவும், அதன் பின்னர் அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராகவும் செயற்படும் போது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமன்றி, மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகள் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்தப்பட்டது.

2015ஆம் வருடத்திற்கு முதலில் மத்திய அரசினால் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்ட போதிலும் அந்த மாவட்டத்தில் அல்லது கிழக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் சுகாதார சேவைகள் மேற்கொள்வதற்காக பாரியளவிலான திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. என்னால் கிழக்கு மாகாண மக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் மாகாண சபை வைத்தியசாலைகளுக்கும் அவதானம் செலுத்தப்பட்டு அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டது.

அத்தோடு தமிழ்-சிங்கள வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 2016 முதல் இப்போது வரை சுகாதார அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றிய முழு விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.தமிழ்-சிங்கள வைத்தியசாலைகள் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என்பதை அதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்வர்.


குற்றச்சாட்டு -02:

மாகாணத்தில் மிகப்பெரிய வைத்தியசாலையான அம்பாறை பொது வைத்தியசாலையின் சேவைகளை விஸ்திரிப்படுத்தாமல் ரூபா மில்லியன் 8500 நிதியில் நிந்தவூரில் தாய் சேய் நடவடிக்கைகள் தொடர்பான விஷேட வைத்தியசாலையொன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.இதனால் சுகாதார துறையின் நிதி முகாமைத்துவம் வினைத்திறனாக மேற்கொள்வதில் தடைகள் ஏற்படல்.


பதில்-02:

நிந்தவூர் பிரதேசத்தில் தாய், சேய் நடவடிக்கைகளுக்கான விஷேட வைத்தியசாலையொன்று அமைப்பதற்கு ரூபா மில்லியன் 8500 ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும். ஆனால் பிரதேசத்தின் தேவைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு அவ்வாறான திட்டமொன்று ஆரம்பித்தல் தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றன.


குற்றச்சாட்டு -3:

இராஜாங்க அமைச்சரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் முகமாக மாகாணத்தினுள் அன்புலன்ஸ் வண்டிகள் பகிர்ந்தளித்தமை.இதன் போது நிந்தவூரில் இரண்டு வைத்தியசாலைகள் உள்ளபடி பட்டியல் தயாரித்து மிகவும் சூழ்ச்சியமாக இரண்டு அன்புலன்ஸ் வண்டிகளை அந்த வைத்தியசாலைக்கு வழங்கியமை      (ஒன்று ஆதார வைத்தியசாலை எனவும் மற்றயது மாவட்ட வைத்தியசாலை எனவும் வௌ;வேறாக குறிப்பிடப்பட்டிருந்தமை.)


பதில்-03:

இந்த நாட்டில் முதற்தடவையாக முழுநாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கும் விதத்தில் 'பென்ஸ் வகை' அன்புலன்ஸ் 100 உம் 'போட்வகை' அன்புலன்ஸ் வண்டிகள் 250உம் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் நிந்தவூர் வைத்தியசாலையில் மிகவும் பழைய பழுதடைந்த அன்புலன்ஸ் வண்டிகள் 02 இற்கு பதிலாக புதிய 02 அன்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அது மேற்கொள்ளப்பட்டிருப்பது பிரதேச மக்களினதும் சுகாதார அதிகாரிகளினதும் கோரிக்கைக்கு அமைய வாகும்.

குற்றச்சாட்டு-04 :

சீன நன்கொடைத் திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட தெஹியத்தகண்டி ஆதார வைத்தியசாலை பைசல் காஸிமின் நெறிப்படுத்தலின்கீழ் அந்தப் பட்டியல் நீக்கப்பட்டு  அவரது வாக்கு வங்கியை அடிப்படையாகக்கொண்ட மூன்று பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்.இதன்மூலம் தெஹியத்தகண்டியின் பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டுள்ளனர்.


பதில்-04:

2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் சீன நன்கொடை திட்டதின்கீழ் தெஹியத்த கண்டி ஆதார வைத்தியசாலை  உள்வாங்கப்படவில்லை என்பதுடன் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டம் உள்வாங்கப்பட்டுள்ளது.அதற்கமைய அரச வைத்திய அலுவலர்களின் சங்கத்தினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவாறு என்னால் தெஹியத்த கண்டி ஆதார வைத்தியசாலையை நீக்கி வேறு வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள்  மேற் கொள்ளப்படவில்லை.

குற்றச்சாட்டு-05:

மாகாணத்தினுள் வைத்தியசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கும் போது (விஷேடமாக கனிஷ்ட ஊழியர்கள்) தமது தேர்தல் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தரப்பினருக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குதல்.

பதில்-05:

இந்தக் குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானதாகும்.இந்த நியமனங்களில் நான் தலையிடுவதில்லை.அரசியல் மற்றும் இன,மத பேதங்களுக்கு அப்பால் தொழில் நியமங்கள் வழங்கப்பட்டுள்ளதை வைத்தியசாலைகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அறிய முடியும்.


குற்றச்சாட்டு-06:

சுகாதார திணைக்களத்தின் மற்றும் அமைச்சின் பிரதான பதவிகளை கருத்திற் கொள்ளாது கிழக்கு மாகாணத்தினுள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு நேரடியாக கடமை தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் அதனூடாக அமைச்சின் பதவிகளை புறக்கணித்தல்.இதைத்தவிர கடந்த நாட்களில் வெகுசன ஊடகங்களில் அமைச்சரின் ஊழியர்களினால் பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரை சுகாதார அமைச்சில் கைது செய்ய முற்பட்டபோது அதற்கு இடமளிக்காமை. அதற்கமைய பைசால் காசிம் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது ஊழியர்கள் அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத குற்றத்திற்கு உட்பட்டவர்களுக்கு சுகாதார அமைச்சின் கதவுகள் திறந்திருப்பதாக சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூறுகின்றனர்.


பதில்-06-

எனது ஊழியர்களுடன் இருக்கும் போது பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரை சுகாதார அமைச்சில் கைது செய்யப்பட்டது உண்மைக்கு புறம்பானது என்பதுடன் நான் எச்சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு உதவவோ, ஆதரவு வழங்கவோ இல்லை.

எனது அலுவலகத்திற்கு பல்வேறுபட்ட நபர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாளாந்தம் வருவதுடன் அவ்வாறு வந்த ஒருவரிடம் பாதுகாப்பு பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதனை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர்களினூடாக உறுதி செய்ய முடியும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

மேற்படி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் எவ்வித அடிப்படைகளும் அற்றது என்பதுடன் எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் என்னை சிரமத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துவது எனது கடப்பாடு ஆகும். 

அத்துடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவதற்கு எடுக்கும் காலத்தை இந்த நாட்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தி ஏழை மக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பிரயோகித்தால் அப்பாவி மக்கள் அவர்களுக்காக செலவு செய்த பணத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

[ஊடகப் பிரிவு ]
Previous Post Next Post