PFIF இன் வருடாந்த இப்தார் நிகழ்வும் புதிய நிருவாக சபைத் தெரிவும்.

கட்டார் நாட்டை தளமாகக் கொண்டு பொத்துவில் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாடுகளில் வாழும் உறவுகளால் அமைக்கப்பட்ட பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பானது கடந்த காலங்களில் பொத்துவில் பிரதேசத்தில் பல பாரிய சமூக சேவைகளில் பங்கு கொண்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு, ஏழைகளுக்கு வாழ்வாதார உதவிகள், பள்ளிவாயல்களுக்கான வேலைத்திட்டங்கள் என பல சேவைகளை பொத்துவில் மண்ணில் இடம்பிடித்த இவ்வமைப்பின் 2017ம் ஆண்டுக்கான இப்தார் நிகழ்வும் புதிய நிருவாக சபைத் தெரிவும் எதிர்வரும் 2017.06.16ம் திகதி கட்டார் BCAS கல்வி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 03.45 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் PFIF அமைப்பின் நோக்கம் பற்றியும், எதிர்கால செயற்பாடு, அதிதி உரை மற்றும் புதிய நிருவாக சபைத் தெரிவுடன் இப்தார் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
எனவே, இந்நிகழ்வுக்கு கட்டார் வாழ் பொத்துவில் உறவுகளை PFIF ஏற்பாட்டுக் குழு அழைக்கின்றேனர்.

மேலதிக தொடர்புகளுக்கு :

முனாஸ் (தலைவர்)                 30311089
அப்துல் சுபஹான் (செயலாளர்) 74002448
குத்தூஸ் மௌலவி                 66671440
இனாம்                         77743756
இம்தியாஸ்                         77198224
யாசீர்                                 77445834
இன்தியாஸ் (BCAS)                 30306382
அமினூடீன்                         33413604
ஜலீல்                                 50478791

Previous Post Next Post