முஸ்லீம் காங்கிரசின் தேசியப்பட்டியல் அக்கறைப்பற்றுக்கே - அட்டாளைச்சேனை இப்தார் நிகழ்வில் தலைவர் அறிவிக்கவுள்ளார்

கடந்த பல மாதங்களாக பேசுபொருளாக இழுபறி நிலையில் இருந்துகொண்டு வந்த முஸ்லீம் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனைக்கு வழங்குவதாக தலைவரால் மற்றும் உயர் பீட உறுப்பினர்களாலும் முடிவு செய்யப்பட்டிருந்தது .
இந்த  நிலையில் அட்டாளைச்சேனை உள்ளூர் அரசியலில் இருந்த போட்டியினால் தாமதாக்கிக்கொண்டே வந்தது இதனால் இவ்வூர் மக்கள் மத்தியில் விமர்சனங்களும் எழுந்து வந்த நிலையில் அவர்களின் தேவையை   கருத்திட்கொண்டு  மாகாண அமைச்சு பதவியை வழங்கி தலைவர் ஹக்கீம் அழகு பார்த்தார் .

இருப்பினும் தேசிய பட்டியல் பிரச்சினைக்கு  தீர்வொன்று எட்டப்படாத நிலையில் அட்டாளைச்சேனையில் ஏட்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வில்  கலந்துகொள்ள உள்ள ஹக்கீமிடம் இந்த கேள்விகளை  போராளிகள் முன் வைப்பார்கள் என்று தெரிந்த ஹக்கீம் இது தொடர்பான ஆலோசனைக்குழு ஒன்றையும் கூட்டி ஆராய்ந்துள்ளார் .


இதன்போது அட்டாளைச்சேனையில் மாகாண அமைச்சு பதவி  இருப்பதாகவும் தற்போது அக்கரைப்பற்றில் மீண்டும் அதாவுல்லாவின் கரம் ஓங்கியுள்ளதனாலும்  தவத்தின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏட்பட்டுள்ளதாலும் தவத்துக்கு இத்தேசியப்படியல் பதவியை வழங்குமாறு கட்சி மீது அக்கறையுள்ள உயர்பீட உறுப்பினர் ஒருவர் முன் வைத்த ஆலோசனையை பரிசீலனை செய்ய வெண்டும் என கூறிய ஹக்கீம் சற்று முன்னர் கடசியின் முக்கிய உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு அக்கறைப்பற்றுக்கான தேசியப்பட்டியலை இன்று அறிவிக்க உ ள்ளேன் என்பது போன்ற பாணியில் பேசியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது .


இந்த தகவல்  உறுதி செய்யப்படவில்லை எனினும் தேசியப்பட்டியலை அக்கறைப்பற்றுக்கு வழங்குவது இந்த சந்தர்ப்பத்தில் கட்சியில் அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சியை உண்டுபண்ணும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின்  கருத்து.
-Mohamed Safaan-
Previous Post Next Post