Fast Lanka ஊடக வலையமைப்பின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு ஆசிச் செய்தி வழங்குவதில் பிரதேச செயலாளர் என்ற வகையில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன் - பொத்துவில் பிரதேச செயலாளரின் ஆசிச் செய்தி

தொடர்பு சாதனங்கள் இன்றைய உலகில் மிகையான ஆதிக்கம் செலுத்துவதை அவதானிக்கலாம். ஊடகங்கள் நமக்கு தகவல்களைத் தருகின்றது. பொழுதுபோக்காக இருக்கின்றது. நமது வாழ்க்கையில் எப்படியோ நுழைந்து விடுகின்றது.
பொத்துவில் பிரதேசம் ஏனைய பிரதேசங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

இருந்த போதிலும், ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளிக்கொணரப்படுவது வரவேற்கத்தக்கதாகும். அந்த வகையில் Fast Lanka ஊடக வலையமைப்பு எமது பிரதேசத்தை மையமாகக் கொண்டு அரசியல், சமூக, கலை, கலாச்சாரம் மற்றும் பிற நிகழ்வுகளையும் செய்திகளாக வெளியிடுவது பாராட்டத்தக்கதாகும்.

ஊடகம் ஜனநாயக அடிப்படைகளில் ஒன்றாகும். எமது நாட்டின் நல்லாட்சியின் பிரதிபலனாக தகவல் அறியும் சட்டம் நாடளுமன்றில் அங்கீகரிகக்கப்பட்டுள்ளமை கருத்துச் சுதந்திரத்தை பிரதிபலித்துக் காட்டுகின்றது.

எனவே, மாறி வரும் உலகிற்கு ஏற்ப விரைவாகவும், நடுநிலையாகவும், நம்பகத்தன்மையுடனும் விஷேடமாக ஊடக தர்மத்தை அனுசரித்து செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் Fast Lanka ஊடக வலையமைப்பு நிலைத்து நிற்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

| என்.எம்.எம்.முஸாரத்,
பிரதேச செயலாளர்,
பொத்துவில். |

Previous Post Next Post