நோன்புக்குமுன் பொத்துவில் மக்களுக்கான குடிநீரை வழங்குமாறு பிரதி அமைச்சர் பைசல் காஸிம் உத்தரவு

பொத்துவில் மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர்ப்பிரச்சினையை நிவர்த்தி செய்து எதிர்வரும் ரமழான் நோன்புக்கு முன்னர் சிறந்தமுறையில் குடிநீரை வழங்குமாறு அதிகாரிக்கு பிரதி அமைச்சர் உத்தரவிட்டார்.
பொத்துவில் பிரதேச் செயலக கேட்போர்கூடத்தில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காஸிம் தலைமையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தே.நீ.வ.சபையின் பொத்துவில் நிலையப் பொறுப்பாளரிடம் பிரதியமைச்சர் இந்த உத்தரவைப்பிறப்பித்தார்.

பொத்துவிலில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு தே.நீ.வ.வடிகாலமைப்பு, நகரத்திட்டமிடல் அமைச்சரும் சி.ல.மு.காங்கிரசின் தேசியத் தலைவருமான கெள-ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டின்மூலம் மேலும் ஐந்து சம்பு(கிணறு)களை அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் முன்னேற்றம் பற்றி விசாரித்தபோது வேலைகள் நடைபெற்று வருவதாகவும் மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதில் மரங்களை அகற்றுவதில் தாமதம் நிலவுவதாக சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டிருந்த அதிகாரியிடம் வேலைகளை துரிதப்படுத்தி எதிர்வரும் ரமழான்மாத நோன்புக்குமுன் மக்களுக்கான குடிநீரைவழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரும் முன்னைநாள் அமைச்சருமான உதுமாலெப்பையும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மரியமின் புத்திரன்-
Previous Post Next Post