நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண சுகாதார அமைச்சர்களின் மாநாடு கொழும்பில்

கடந்த வருடம் மத்தியரசின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 185 மில்லியன் ரூபாய் பணத்துக்கான அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படாததனால் சென்ற வருட இறுதியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் திருப்பியனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிதியை மீண்டும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு திருப்பித் தரவேண்டும் என்றகோரிக்கையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தனவிடன் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக குறிப்பிட்ட நிதி மீண்டும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தனவின் தலைமையில் இலங்கையிலுள்ள மாகாண சபைகளின் சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு இன்று (11) நாராயண்பிட்டி இரத்த வங்கி மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இங்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் முடிந்தவரை சுகாதார அமைச்சர் நிவர்த்தி செய்துதரவேண்டு என்று வேண்டிக்கொள்வதுடன் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பரிசோதனை ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், சிற்றூளியர்கள், சாரதிகள், அம்பியுலன்ஸ், மருந்துகளை ஏற்றும் வாகனங்கள் என பலதேவைகளை வழங்கி வைக்கவேண்டும் என்று இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தரமுயர்த்தப்படவேண்டிய வைத்தியசாலைகளின் தேவைகளையும் உடனடியாக தரமுயர்த்தி இதற்கான ஆளணி மற்றும் பொளதீக வளத் தேவைகளையும் நிவரத்தி செய்து வழங்கவேண்டும் எனவும் அவர் இங்கு உரையாற்றினார்.

இலங்கையிலுள்ள மாகாண சுகாதார அமைர்களின் தங்களின் பிரச்சினைகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தரக்கோரி பல கோரிக்கைகளை சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் இந்த மாநாட்டின்போது முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
-அபு அலா-
Previous Post Next Post