வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு  கல்வி வலய   பாடசாலைகளுக்கிடையில்  நடத்தப்பட்ட      சுகாதார கழகங்களுகிடையிலான போட்டியில் வெற்றி பெற்ற  பாடசாலைகளுக்கு   விருது வழங்கும் நிகழ்வு  இன்று  இடம்பெற்றது .
மட்டக்களப்பு  கல்வி  வலய அலுவலக ஏற்பாட்டில்    மட்டக்களப்பு கல்வி  வலயத்திகுட்பட்ட பாடசாலைகளில்   இயங்கி  வருகின்ற பாடசாலை சுகாதார கழகங்களுக்கு  இடையில்  நடத்தப்பட்ட  சுகாதார  மேம்பாட்டு மதிப்பீட்டு போட்டியில்  வெற்றி பெற்ற  பாடசாலைகளுக்கு  விருதுகளும்  மற்றும்  மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு   இன்று மட்டக்களப்பு  வலய கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில்  மட்டக்களப்பு வின்சட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளின்   சுகாதார கழகங்களின்  செயல்பாடுகளான பாடசாலை சுகாதாரம் , மாணவ தேகாரோக்கியம்  மற்றும்  சுகாதாரம் , முதலுதவி , சுகாதார வைத்திய பரிசோதனை , பாடசாலை சுகாதார வேலைத்திட்டம் , பாடசாலை உட்கட்டமைப்பு ம் , மாணவர்ளின் சமூக பங்களிப்பு , பாடசாலை சூழல் , பாடசாலை உணவகநலத்தன்மை, உள சமூக ஆரோக்கியம் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் போன்ற வற்றின்  பாடசாலை  சுகாதார கழகங்களின் செயல்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட  பாடசாலை மட்டத்திலான போட்டி பரீட்சைகளில்  வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு பதக்கங்களுடனான விருதுகளும் இதில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

மட்டக்களப்பு கல்வி வலயத்தில்  நடத்தப்பட்ட போட்டி பரீட்சைகளில் கலந்து கொண்ட பாடசாலைகளில் 56 பாடசாலைகள் வெற்றி பெற்றுள்ளன . இதில்  15  பாடசாலைகள் தங்க பதக்கங்களையும் ,26  பாடசாலைகள்  வெள்ளி  பதக்கங்களையும் , 15  பாடசாலைகள் வெண்கல பதக்கங்களையும்   பெற்றுக்கொண்டன .

இந்த பாடசாலைகளுக்கான பதக்கங்களும் ,விருதுகளும்  இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர்  வைத்தியர்  எ . எல் . எப் . ரஹமான் ,  விசேட அதிதிகளாக  மட்டக்களப்பு    சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் எம் . அச்சுதன் , ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் கே . துரைராஜசிங்கம் , ஆரையம்பதி  சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் வி . பவித்திரன் , கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்   ஆர் . நந்தகுமார் , ஏறாவூர் பொது சுகாதார பரிசோதகர் எம் .எச் . எம் . பளீல் , ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் எ . எம் . எம் . பஷீர்  மற்றும் வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
-Anthony Leon raj-
Previous Post Next Post