YLS. ஹமீடுக்கு நடந்தது என்ன? ? வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது மாற்றந் தேவை குழு-(வீடியோ இணைப்பு)

அ.கி.ம.கா. ற்கும். செயளாலர் நாயகத்திற்கும் தேர்தல் முடிந்த காலம் தொட்டு விரிசல் ஏற்பட்டது யாவரும் அறிந்ததே.
அண்மையில் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பங்கு பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் அவர்கள் தனது கட்சியின் செயற்பாடுகள் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் என்பதை தெளிவு படுத்தியது மாத்திரமல்லாது குறிப்பாக செயலாளர் ஏன் கட்சியில் முரண்பட்டிருந்தார் என்பது தொடர்பாகவும் விளக்கியிருந்தார் ..

இந்த தருவாயில் செயளாளர் நாயகம் வை.ல்.ஸ். ஹமீட் அவர்கள் தனது முக நூலில் ஓர் சவாலுடன் கூடிய பதிவினை மேற்கொண்டிருந்தார்.

தேர்தல் முடிந்ததிலிருந்து இன்றுவரைதான் மௌனம் காத்து வருவதாகவும் ஆனால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவரது வழமையான பாணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறுக்கி தனக்கு சாதகமான பதிலினை எழுதியுள்ளார் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது அந்த முகநூல் பதிவேற்றம்.

இது தொடர்பாக மேலும் அமைச்சர் ரிஷாட்டினை பகிரங்க சவாலுக்கு வரும் அழைப்பொன்றினை மேற் கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் மாற்றந்தேவை குழுமம் வை.ல்.ஸ் ஹமீட் அவர்களினை அனுகி செவ்வி யொன்று கண்டிருந்தது.

மாற்றந்தேவை பிரதான செயற்பாட்டாளரும் செவ்வித் தொகுப்பாளரும் ஆகிய சுக்ரி அவர்களினால் மூன்று பிரதான கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

கேள்விகள் வை.ல்.ஸ் ஹமீட் அவர்களை நோக்கிமேற்குறிப்பிடப்பட்ட. கேள்விகள் எழுத்துருவில்

01.கட்சித் தலைமைக்கும் அதாவது ரிசாட் பதியுதீன் அமைச்சருக்கும் செயலாளர் உங்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்படக் காரணம். என்ன ?? 

02.தேசியப்பட்டியல் தனக்கு கிடைக்காதலால் தான நீங்கள் கட்சியை விட்டு விலகி காட்டிக் கொடுக்கிறார் என்கிறார் இதன் தெளிவு?

03.நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு தொகுதிவாரி தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு சாதகமா அல்லது பாதகமா.. ??? 

இதன் போது சுக்ரியின் கேள்விகளுக்கு வை.ல்.ஸ். இன் சூடான பதில்கள் இதோ.
Previous Post Next Post