Top News

சாய்ந்தமருது அல் ஜலால் வீதியின் அவல நிலை உரியவர்கள் ஏன் இதுவரை கண்டுகொள்ளவில்லை

ஒரு புறம் அல் ஜலால் வித்தியாலயம் எனும் பாடசலை மறு புறம் இரண்டு மையவாடிகள் என அமைந்துள்ள இந்த சாய்ந்தமருது அல் ஜலால் வீதி கடந்த பல தினங்களாக மிக மோசமாக குப்பைகளால் நிரப்பப் பட்டு பாடசலை மாணவர்களுக்கும் மையத்துக்களை அடக்கம் செய்ய வருபவர்களுக்கும் கடுமையான தாக்கங்களை விலைவித்து வருகின்றது என பாடலை மாணவர்கள் மற்றும் மக்கள் விசனம் தெரிகிக்கின்றனர்.
தற்போது நிலவுகின்ற அடைமழை காரணமாக இந்த வீதில் கிடக்கும் குப்பை சுரட்டை டயர் போன்ற கழிவுப் பொருட்களில் மழை நீர் தேங்கி நின்று டெங்கு நுலம்பு உருவாவதற்கான நிலமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நுலம்புகள் பெருகுமாக இருந்தால் அருகில் உள்ள பாடசாலையில் அதிகளவான மாணவர்கள் கல்வி கற்கின்றனர் அவர்களின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும் என்பது வெளிப்படையான உண்மை மாணவர்களின் உயிர் பறிக்கப்பட்ட பின் தான உரியவர்களால் இன்நிலமை சீர்செய்யப்படும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
ஆகவே நிலமை எதுவாக இருந்தாலும் உரியவர்கள் உடன் தலையிட்டு இவ்வீதியில் கிடக்கின்ற குப்பைகளை உடன் அகற்ற முன்வர வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-முஹம்மட் றின்ஸாத்-
Previous Post Next Post