கல்வியும் எங்களின் உரிமை.... திருகோணமலையில் மாணவர் சமூகம் ஆர்ப்பாட்டம்

ஆசியாவில் கல்வியறிவில் 99% கொண்டு முதலிடம் கொண்ட எமது ஜனநாயக சோசலிச குடியரசில் நடைமுறையில் சில தீயசக்திகள் உயர்கல்வி கற்கைநெறிகள் சிலவற்றையும், இலவசக்கல்வி முறைமையினையும் புறம் தள்ளும் வகையில் செயற்படுகின்றன.
பதீலீட்டுக் கற்கை நெறிகளின் அறிமுகங்கள் மூலமும் உயர்கல்வித் தொகையினை வழங்குவதற்கு தனியார் துறையினை அனுமதிப்பதன் மூலமும் இலங்கையின் கல்வித்தறையில் மாபெரும் வரலாற்றுத் தவறை ஏற்படுத்த முயலும் திட்டங்கள் தொடர்பாக அவதானத்தடன் இருப்போம். அவற்றினை எதிர்ப்போம்.

மாணவர்கள் தமக்கான உரிமைகளை கேட்டு அமைதி வழியில் பேரனிகள், போராட்டங்கள் நடத்துகின்றனர். மனிதாபிமானம் எதுவுமின்றி ஒரு சில நிமிடங்களில் வன்முறையாக சட்டத்திற்கு புரம்பானதாக திரிவுப்படுத்தப்படுகின்றது.

மாணவர்கள் தாக்கப்படுகின்றனர், கைது செய்யப்படுகின்றனர் இதன் மூலம் மாணவர்களுக்கு தமக்கான எதிர்காலம் தொடர்பில் அச்ச நிலை தோற்றம் பெருகின்றது. இந்நிலைகள் தொடரின் கல்வி அறிவற்ற, பாழடைந்த யுகத்திற்கு எமது சமூகம் கொண்டு செல்லப்படலாம்.

நல்லாட்சி அரசிடம் இருந்து மாணவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்மானங்களை எதிர்பார்த்து நிற்கின்றோம். என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பி திருகோணமலை மாணவர் சமூகம் மாபெரும் ஆர்பாட்ட பேரணயை  திருகோணமலை பிரதான வீதியினூடாக 02.11.2015 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் நடத்தியது.
-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post