பொத்துவில் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு சேவை நலன் பராட்டு விழா

பொத்துவில் மத்திய கல்லூரியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2015 வரை அதிபராக கடமையாற்றி பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.புஹாரி அவர்களுக்கான சேவை நலன் பராட்டு விழா இன்று 2015.12.05 பொத்துவில் மத்திய கல்லூரி கல்விச் சமூகத்தால் நடாத்தப்பட்டது.
1993.01.11ம் திகதி ஆசிரியர் சேவையில் இணைந்து முதல் பாடசாலையாக பொத்துவில் மத்திய கல்லுரியில் நியமிக்கப்பட்டார். வகுப்பாசிரியராக, பகுதித் தலைவராக மற்றும் பாடசாலை குணநல உள்ளீட்டு பகுதிக்கு பொறுப்பளராகவும் செயற்பட்ட இவர் 2009.11.13 அதிபர் சேவையில் இணைந்து அதே பாடசாலையில் பிரதி அதிபராக செயற்பட்டார்.
இவரது சேவையை கண்கூர்ந்த அதிகாரிகளும் பொத்துவில் மத்திய கல்லூரியில் வெற்றிடமாக இருந்த அதிபர் பதவிக்கு இவரை 2012.04.05 இல் நியமித்தனர்.

இவர் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டதன் பிற்பாடு பாடசாலை கண்ட மாற்றமோ பெரிது. கொய்க்கா வேலைத்திட்டத்தின் கீழ் கட்டிடம், மஹிந்தோதயா தொழிநுட்ப ஆய்வுகூடம், பாடசாலை புறச்சூழல் இயற்கை மயம், முன்றல் பொலிவுடன், பேயுரைந்த ஆராதணை மண்டபம் வெளிச்சம், புதிய பள்ளிவாயல், பிள்ளை நேயப் பாடசாலைத் திட்டத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கான பயிற்சிகள் என பல சேவைகளை பட்டியலிட்ட கூற முடியும்.

இவ்வாறே இறுதி வரை பாடசாலை என்ற மனதுடன் சேவை புரிந்த இவர் 2015.09.03 பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றார்.
கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.அப்துல் ஹக்கீம் அவர்களின் தலமையில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் என்.அப்துல் வஹாப், பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜீ.யூ.வசந்த குமார் கௌரவ அதிதிகளாக பாடசாலை கல்விச் சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை ஆசிரியர்களால் நினவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
Previous Post Next Post