திருகோணமலை சம்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

சம்பூரில் விடுவிக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளில் மீள்குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பகுதியிலிருந்து சேனையூர் மகா வித்தியாலயம் மற்றும் சம்பூர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீழ்குடியேற்ற அமைச்சின் நிதியின் கீழ் 105 துவிச்சக்கர வண்டிகள் கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீழ்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்களால்  வெள்ளிக்கிழமை(4) காலை 11.30 மணிக்கு சேனையூர் மகா வித்தியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

ஆண் மாணவர்களுக்கு 51 துவிச்சக்கரவண்டிகளும் பெண் மாணவர்களுக்கு 54 துவிச்சக்கரவண்டிகளுமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன் கல்வி உயர்அதிகாரிகள், அதிபர்கள் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
-எப்.முபாரக்- 
Previous Post Next Post