கத்தாரில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு –நாளை

ஸ்ரீலங்கா தாஃவா சென்டர் கத்தார்  (SLDC-QATAR)  வருடா வருடம் தமிழ் பேசும் இலங்கை-இந்திய இஸ்லாமிய உறவுகளின் நன்மை கருதி மாபெரும் இஸ்லாமிய மாநாடுகள் மற்றும் பயான் நிகழ்ச்சிகள், பெண்களுக்கான விஷேட பயான்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை மிகவும் வெற்றிகரமாக கத்தார் மண்ணிலே நடாத்தி வருகின்றது.
இதிலும் குறிப்பாக தொழில் நிமித்தம் கத்தாரில் பணிபுரிகின்ற தமிழ் பேசும் உறவுகளும் மார்க்கத்தை அதன் தூய வடிவில் கற்று தங்கள் வாழ்வில் அதனைக் கடைப்பிடித்து  இறுதி மூச்சும் இறை திருப்தியும் பெற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை  அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் தொடரில் -இன்ஷா அல்லாஹ் - இந்த வருடமும்  தலைசிறந்த, தமிழ் உலகம் மற்றும் சர்வதேசம் நன்கறிந்த உலமாக்களான : அஷ்ஷெய்க் - டாக்டர் M.L. முபாரக் (மதனி) PHD, அஷ்ஷெய்க் A.C.K.முஹம்மத் (ரஹ்மானி) மற்றும் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இஸ்லாமிய மாநாடு எதிர்வரும் 02-11-2018 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிமுதல் 9:15 மணிவரை கபனார் பின் ஸாயித் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுவனம் உங்களை அழைக்கிறது எனும் கருப்பொருளில் ஆரம்பிக்கப்படவுள்ள இம் மாநாட்டில் 'வாக்களிக்கப்பட்ட சுவனம் உங்களை அழைக்கிறது' எனும் தலைப்பில்  அஷ்ஷெய்க் - டாக்டர் M.L. முபாரக் மதனியும் ,தவறு செய்யும் மனிதனும் மன்னிக்க விரும்பும் இறைவனும்' எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் A.C.K..முஹம்மத் (ரஹ்மானியும்,இயந்திர வாழ்வும் இழந்து விட்ட நிம்மதியும்'  என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் ஆகியோரும் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர்.
எனவே கட்டார் வாழ் எம் உடன்பிறப்புக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு ஸ்ரீலங்கா தாஃவா சென்டர் கட்டார். அழைப்பு விடுக்கின்றது.
 குறித்த கத்தார் 2018 மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு : 00974-6624 3282, 00974-7028 3285 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சுவர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சுவர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவுக்கு அதில் நுழைவதற்கான தகுதிகள் மற்றும் தராதரங்கள் பற்றி போதிக்கப்படுவதுமில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'இந்த உலகத்தில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், 'ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உனக்கு ஏற்பட்டதா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதில்லை' என்று கூறுவார் என்றார்கள்.
     
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
Previous Post Next Post