Top News

ஜீஎஸ்பி + கிடைத்தது இதற்காகத்தானாம்

நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜீஎஸ்பி + வரிச் சலுகை இந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்குக் கிடைத்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 27 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது.ஆனால்,அரசியல் காரணங்களின் பின்னணியில்தான் இது வழங்கப்பட்டது என்பதுதான் உண்மை.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு பிணையைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அந்த அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் சிலர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு முக்கிய அமைச்சரைச் சந்தித்து உரையாடினர்.

அந்த அமைச்சரோ பிணை சாத்தியமற்றது என்று கூறினார்.அவர் அதற்குக் கூறிய காரணம் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.எமக்கு இப்போது ஜீஎஸ்பி + வரிச் சலுகை கிடைத்திருப்பதே அந்த அதிகாரியை உள்ளே போட்டதால்தான் என்று அமைச்சர் கூறினாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பிரதிநிதிகள் ''அப்போ எங்களைக்  கா [கூ] ட்டிக் கொத்துத்தான் இந்தச் சலுகையைப் பெற்றீர்கள்போல''என்று ஆத்திரம் பொங்க நாகரீகமான வசனங்களால் கூறிவிட்டு வெளியேறினார்களாம்.அமைச்சரோ எதுவும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தாராம்.

[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர் ]நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜீஎஸ்பி + வரிச் சலுகை இந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்குக் கிடைத்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 27 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது.ஆனால்,அரசியல் காரணங்களின் பின்னணியில்தான் இது வழங்கப்பட்டது என்பதுதான் உண்மை.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு பிணையைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அந்த அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் சிலர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு முக்கிய அமைச்சரைச் சந்தித்து உரையாடினர்.

அந்த அமைச்சரோ பிணை சாத்தியமற்றது என்று கூறினார்.அவர் அதற்குக் கூறிய காரணம் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.எமக்கு இப்போது ஜீஎஸ்பி + வரிச் சலுகை கிடைத்திருப்பதே அந்த அதிகாரியை உள்ளே போட்டதால்தான் என்று அமைச்சர் கூறினாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பிரதிநிதிகள் ''அப்போ எங்களைக்  கா [கூ] ட்டிக் கொத்துத்தான் இந்தச் சலுகையைப் பெற்றீர்கள்போல''என்று ஆத்திரம் பொங்க நாகரீகமான வசனங்களால் கூறிவிட்டு வெளியேறினார்களாம்.அமைச்சரோ எதுவும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தாராம்.

[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர் ]
Previous Post Next Post