மூதூர் சிறுமிகளின் கற்பழிற்கு எதிராக வாழைச்சேனையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மல்லிகை தீவு எனும் பகிராமத்தில் பாடசாலைக்கு சென்ற மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிராக வாழைச்சேனை இந்து கல்லூரியில் இருந்து பொலிஸ் நிலையம் வரைக்கும் பொதுமக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 01.06.2017  9மணியளவில் இடம் பெற்றது.


 குறித்த ஆர்ப்பட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும்
மேலும் குறித்த ஆர்ப்பட்டத்தினை ஏற்பாடு செய்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.. அன்மை காலமாக எமது நாட்டில் பெண்களை மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்வதென்பது மலிவான விடயமாக மாறி வருகின்றது. குறிப்பாக வடகிழக்கு பிரதேசங்களில் இவ்வாறான விடயங்கள் அதிகமாக இடம் பெறுவதினை காணக்கூடியதாக இருக்கின்றது. மறு பக்கத்திலே இந்த நல்லட்சி அரசாங்கத்தில் குறித்த பாலியல் துஸ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படுவது குறைவாகவே காணப்படுகின்றது.

அதே போலவே அன்மையில் வட மாகாணத்தில் வித்தியா என்ற மாணவியும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், தென்னிலைங்கையில் சிரேயா எனும் சிறுமியும் இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை இன்னும் எங்களுடைய மனதிலிருந்து ஆறாத வடுவாக இருக்கின்ற இந்த நிலையில் மீண்டும் இவ்வாறானதொரு சம்பவம் இடம் பெற்றுள்ளமையானது மிகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாக உள்ளது.

ஆனால் திருகோணமையில் ஒரே அடியாக மூன்று மாணவிகள் இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை மண்ணிக்க முடியாத வேதனையான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. சிறுமிகள் சிறார்கள் என்பது எங்களுடைய நாளைய தலைவர்கள். ஒரு நல்ல சமூகமானது நல்ல சிறார்களை கொண்டுதான் எதிர்காலத்தில் உறுவாக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த நல்லாட்சி அரசாங்கமானது இவ்வாறான சிறுவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக ஏற்படுதப்படுகின்ற துஸ்பிரயோகங்களை மண்ணிக்க முடியாத குற்றமாக கருதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.


அத்தோடு உடனடியாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்கு முகமாக குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்னிறுத்தி தகுந்த தண்டை வழங்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்ட மகஜர் ஒன்றும் வாழைச்சேனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனவிடம் கையளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வுகளின் விரிவான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவெற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான காணொளி:-


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்- 
Previous Post Next Post