முடியுமானால் எமது சவாலை ஏற்று தேர்தலை நடாத்தவும்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

தனக்கு முன்னால் வைக்கப்பட்ட சவாலை ஏற்று தான் காலி முகத்திடலை நிரப்பி காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முடியுமானால் இவ்வரசு உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை தேர்தலை நடாத்திக் காட்டட்டுமென இவ்வரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற மேதினக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே இந்த சாவலை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் :

காலி முகத்திடலில் எமது மே தின கூட்டத்தை நடத்தப்போவதாக கூறிய போது சிலர் ஏளனமாக சவால் விட்டனர். முடியுமானால் காலி முகத்திடலில் அரைவாசியையாவது நிரப்பிக்காட்டட்டும் என்பதே அவர்களது சவால். நாம் எமது அரசியல் வாழ்வில் பல சந்தித்துள்ளோம்.

அவர்களது இந்த சவாலையும் தைரியமாக ஏற்றுக்கொண்டோம். இன்று காலி முகத்திடலை அல்ல அதையும் தாண்டி மக்கள் வெள்ளம் படையெடுத்துள்ளது. ஒருபுறம் கொள்ளுபிட்டி சந்திவரையும் மறுபுறம் கொம்பனி வீதி வரையும் மக்கள் நிரம்பியுள்ளார்.

எமது சில ஆதரவாளர்கள் உள்ளே வரமுடியாமல்,கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து என்னை தொடர்புகொண்டு, “சேர் எங்களுக்கு அவ்விடத்துக்கு வரமுடியவில்லை நாம் திரும்பி செல்லவா?” என அனுமதி கேட்கின்றனர்.

முடியுமானால் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தான் சவால் விடுகிறேன். நாம் அவர்களின் சவாலை ஏற்று,இன்று மக்களை ஒன்று திரட்டி காட்டியுள்ளோம்.அவர்கள் எங்களது சவாலை ஏற்பார்களா?
Previous Post Next Post