கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வைக்கு பொத்துவில் மக்கள் நன்றி தெரிவிப்பு

பொத்துவில் பிரதேசத்தில் காணப்பட்டு வந்த நீண்ட கால ஆசிரியர் வெற்றிடங்களால் பொத்துவில் பிரதேச மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியான தருவாயில் பொத்துவில் மத்திய கல்லூரி, பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரிகளின் அபிவிருத்திக் குழு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வையிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தனர்.
இவ்வாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கடந்த ஜுன் மாதம்  29ம் திகதி கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரிண் பெணார்ன்டோ தலமையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், கல்முனை, அக்கறைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொத்துவில் உப வலய அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்கிடையில் ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடிலில் பொத்துவில் உப வலயத்தில் தொடர்ச்சியான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதனால் அப்பிரதேச மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை உடனடியாக நிவர்த்திக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற ஆளுனர் மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் கல்முனை வலயத்திலுள்ள மேலதிக 46 ஆசிரியர்களை அக்கறைப்பற்று வலயத்திற்குட்பட்ட அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கும், அக்கறைப்பற்று, அடட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளிலுள்ள 46 ஆசிரியர்களை பொத்துவில் உப வலயப் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 01ம் திகதிக்கு முதல் அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க்பட்டது.
அதன் பிரகாரம் கடந்த 2016.08.01ம் திகதி குறித்த 46 ஆசிரியர்களும் பொத்துவில் உப வலயப் பாடசாலைகளுக்கு சமூகமளித்து கடமையினைப் பொறுப்பேற்றுள்ளனர்.

பொத்துவில் பிரதேசத்தில் நிலவி வந்த பாரிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தந்த கிழக்கு மாகாண முன்னாள் நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான கௌரவ எம்.எஸ்.உதுமாவெ;வவைக்கு பொத்துவில் மக்கள் பெரிதும் நன்றியினைத்  தெரிவிக்கின்றேனர்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண கல்வியமைச்சர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர், மற்றும் நலன் விரும்பிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேனர்.


கடந்த 2016.06.29ம் திகதி ஆளுனர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தின் செய்தி இணைப்பு : 



-Official Reporter-
Previous Post Next Post