பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) ஏற்பாட்டில் 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு

பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) ஏற்பாட்டில் 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு 2016.07.16ம் திகதி காலை 08 மணி முதல் ஆரம்பமாகவுள்ளது.

கீழ்வரும் நாட்களில் குறித்த பாடங்களுக்கான இலவசக் கருத்தரங்கு நடைபெறவுள்ளன

2016.07.16 (சனிக்கிழமை)         விவசாயம் K.நௌஸாத் (ஆசிரியர்)
2016.07.17 (ஞாயிற்றுக்கிழமை) அரசியல்             M.L.பிர்தௌஸ்(அதிபர்),
                                                                                                M.B.A.றஹீம் (அதிபர்)
                                                                                               M.S.அஸ்முல் (ஆசிரியர்)
2016.07.18 (திங்கட்கிழமை) தமிழ் M.I.M.A. கையூம் (ஆசிரியர்)
                                                                                               A.தாஜகான் (அதிபர்)
2016.07.19 (செவ்வாய்க்கிழமை) பொருளியல் A.L.M.நாசர் (ஆசிரியர்)
                                                                                               A.B.அஸ்ரப் (ஆசிரியர்)

குறித்த தினங்களில் காலை 08.00 மணிமுதல் மாலை 04.00 மணி வரைகொழும்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வினாததாள்களை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் PFIF அமைப்பானது பொத்துவில் பிரதேசத்தில் பல சமூக மட்ட வேலைகளில் குறிப்பாக கடந்த வருடம் சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு, விதவைகள் ஏழைகளுக்கான வாழ்வாதார உதவிகள், பாடசாலை, பள்ளிவாயல்களுக்கான நன்கொடைகள் என பல சமூக செயற்பாடுகளில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கருத்தரங்கிற்கு Fast Lanka ஊடக வலையமைப்பு ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-PFIF Media Unit-


Previous Post Next Post