பொத்துவில் மக்களை ஏமாற்ற நாளை வருகின்றார் அமைச்சர் ஹக்கீம்

பொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் நீர் சரியாக வழங்கப்படாமல் அடிக்கடி நிறுத்தப்படுவதும் போடுவதுமாக காணப்பட்டது.

அதாவது பொத்துவில் நாவலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புக்குச் சொந்தமான கிணறுகள் பழுதடைந்து நீரினைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 03ம் திகதி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைசச்சர் றவூப் ஹக்கீம் அவர்களினால் புதிய கிணறுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது.

ஆனால் மந்த கதியில் சென்று கொண்டிருக்கும் வேலைத்திட்டம் முடிவடையாத நிலையில் இரண்டு நீர் உந்தும் நிலையங்களை திறக்க வருகின்ற அதே வேலை குறித்த இரண்டு நீர் உந்தும் கிணறுகளுக்கான இயந்திரங்கள் தொழிநுட்ப கோளாறு காரணமாக இரண்டு வாரங்களாக இயங்காமலும் மாற்று வழியில் நீர்த் தாங்களில் நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் கடந்த சில தினங்களாக பொத்துவில் பிரதேசத்தில் நீர் வெட்டு அடிக்கடி அமுலிலும் உள்ள நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை குறிவைத்து பொத்துவில் மக்களை ஏமாற்ற நாளை அமைச்சர் ஹக்கீம் பொத்துவில் வருகை தரவுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது குறித்து சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளரும், முன்னாள் தவிசாளரிடம் வினவிய போது, 11 மில்லியன் ரூபா செலவில் எமது தலைவரால் அடிக்கல் நடப்பட்ட வேலையில் இரண்டு கிணறுகள் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மக்கள் பாவனைக்கான கையளிக்கவே நாளை வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொத்துவில் மகன்

Previous Post Next Post