இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் நாட்டுப்பற்று உள்ளவர்களாகவும், நம்பிக்கை, விசுவாசம் உள்ளவர்களாகவும் செயற்பட்டுள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா

இலங்கையில் முஸ்லிம்கள் எப்போதும் நாட்டுப் பற்று உள்ளவர்களாகவும், நம்பிக்கை, விசுவாசம் உள்ளவர்களாகவும் செயற்பட்டுள்ளனர் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.



தேசிய காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு 2016.07.01 அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், நமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் கண்ணியமாகவும் காலங்களிலே அரசர்களுக்கு நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். இதுதான் இலங்கை முஸ்லிம்களுடைய வரலாறு ஆகும்.




இந்த வரலாற்று காலங்களை நாம் பார்க்கின்ற போது நமது முஸ்லிம் தலைமைகள், உலமாக்கள் எவ்வாறு மற்ற இன மக்களோடு பழகி இருக்கின்றார்கள். எவ்வாறு முன் உதாரணமாக இருந்திருக்கின்றார்கள். அதே போன்று எவ்வாறு நம்பிக்கை உள்ளவர்களாக முஸ்லிம்கள் ஐக்கியமாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பவற்றையெல்லாம் நாம் இன்னும் இன்னும் மீட்க வேண்டிய சந்தர்ப்பம் உள்ளது. சிங்கள ஏழை மக்கள் கூட ஒவ்வொரு மாதமும் தாங்கள் உழைக்கின்ற பணத்திலே அடுத்த வருட சித்திர  புத்தாண்டுக்காக சேமிக்கின்ற பணத்தைக் கூட முஸ்லிம் முதலாளிகளிடம்  நம்பிக்கையுடன் கொடுத்து அதனை மீண்டும் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு முஸ்லிம்கள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்திருக்கின்றார்கள். விசுவாசிகளாக இருந்திருக்கின்றார்கள். நல்ல மனம் படைத்தவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

ஆனால் கால ஓட்டத்தில் நமது முஸ்லிம்கள் மத்தியிலே சில மன மாற்றங்கள் சில வித்தியாசமான உணர்வுகளினால் நாம் சில பிரதேசத்திலே நம்பிக்கைற்றவர்களாக மாறியுள்ளோம். இவற்றை நாம் ஒழுங்குபடுத்த வேண்டும்.

இவற்றை நாங்கள் கடந்த காலங்களிலே நமது முன்னோர்கள் எவ்வாறு தலைமை தாங்கினார்களோ எவ்வாறு முகங் கொடுத்தார்களோ அதற்கேற்றவாறு இந்த சமூகத்தையும், வருங்கால தலைமைத்துவங்களையும் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது.

ஒவ்வொரு விடயத்திற்கும் நாங்கள் தீர்வு காண்கின்ற பொழுது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அந்த விடயங்களை மாத்திரம் முடிவுக்கு கொண்டு வரக்கூடியதாக நமது முடிவுகள் அமைவது பொறுத்தமாக இருக்க மாட்டாது. ஒவ்வொன்றையும் நாங்கள் தீர்க்கமாக, தீர்க்கதரிசனமாக முடிவுஎடுப்பவர்களாக இருக்க வேண்டும்.ஏதாவது ஒரு சம்பவம் ஏற்படுகின்ற போது இன்றைக்கு ஒன்றை பிழையாக சொல்லி,நாளைக்கும் அடுத்த மாதத்திலும் இன்னும் ஒன்றை செல்பவர்களாக நாங்கள் இருக்க முடியாது.
அன்றும்,இன்றும்,என்றும் முஸ்லிமகள் எனப்படுபவர்கள் ஒரே பிரஜைதான், அவர்களுடைய கொள்கைள் ,நடவடிக்கைகள்,பண்புகள் ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டுக்கு நாங்கள் வரவேண்டும். சில சந்தர்ப்பங்களிலே நாங்கள் எடுக்கின்ற சில முடிவுகளின் பின்னர் ஏற்படுகின்ற விளைவுகள சிந்திப்பவர்களாக நாங்கள் இருப்பதில்லை.

தேசிய காங்கிரஸ் என்கின்ற ஸ்தாபனம் அதன் அரசியல் வரலாற்றிலே அரசியல் ரீதியாக பல முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரும் குற்றம் செய்யாதவர்களாக  இருக்க முடியாது. நாங்கள் குற்றம் புரியக்கூடியவர்கள் அல்லாஹ் அதனை அறிந்தவனும் மன்னிக்க கூடியவனும் ஆனால் சமூகம் ரீதியான விடயங்கள் வருகின்ற போது அவற்றில் யாரும் குற்றவாளிகளாக இருக்க முடியாது.
சமூகத்தின் பிரச்சினைகளை கையாழுகின்ற பொழுது கவனமாக செயற்படவேண்டும் சமூதாயம் மதிக்கவில்லை என்றால் மற்றவர்களும் மதிக்கமாட்டார்கள் அந்த அடிப்படையிலே ஒவ்வொரு சந்தர்பத்திலும் தேசிய காங்கிரஸ் எடுக்கின்ற முடிவுகள் சரியாக இருக்கும் சில உடனடியாக தீர்வு காண முடியாவிட்டாலும் கால ஒட்டத்தில் அது சரி என்று நாங்களும் மக்களும உணரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுயிருக்கின்றது.



தேசிய காங்கிரஸின் வெற்றிடம் ஏற்பட்டதை இன்று மக்கள் ஏற்றகொண்டு இருக்கின்றார்கள். எமது பணி தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க கூடிய நிலைமைகளும், மனமாற்றங்களும் ஏற்பட்டு வருவதற்கும் வெற்றி தோல்வி அவசியமாகும். தேசிய காங்கிரஸை பொறுத்த வரையில் அதனுடைய பணியை தொடர்ந்தும் செய்து கொண்டுயிருக்கின்றது எனவும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மேலும் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான தேசிய காங்கரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் கலாநிதி ஏ.உதுமாலெப்பை உட்பட முப்படை உயரதிகாரிகள், கட்சி உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

-எம்.ஜே.எம்.சஜீத்-
Previous Post Next Post