Top News

திருகோணமலையிலுள்ள அரச பாடசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா?? இம்ரான் MP கேள்வி

திருகோணமலையிலுள்ள பல அரச பாடசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா என கேள்விஎழுப்பினார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்.
வியாழக்கிழமை  (2) பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ள  மூதூர் உமர் பாறுக் வித்தியாலயத்தின் இரண்டுமாடி கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார் .

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
சென்ற முறை இப்பாடசாலையின் குறைகளை ஆராய இப்பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட போது இப்பாடசாலை அதிபரிடம் நான் கேட்டது இப்பாடசாலை பதிவிசெய்யப்பட்டுள்ளதா என ஒரு சாதாரண அரச பாடசாலையில் இருக்கவேண்டிய குறைந்தபட்ச பௌதீக வசதிகள் எதுவும் இப்பாடசாலையில் இருக்கவில்லை அச்சமயத்தில் இப்பாடசாலை அதிபருக்கு  வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றகிடைத்தைதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் இதேபோல் இப்பாடசாலையின்  ஏனைய குறைபாடுகளை நிவர்த்திசெய்ய என்னாலான பங்களிப்புகளை வழங்குவேன்.

தேசிய ரீதியில் சாதிக்கக்கூடிய மாணவர்கள் எமதுமாவட்டத்திலும் உள்ளனர் ஆனால் பிரபல அரச பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சாதாரண வசதிகள் கூட எமது தேசிய பாடசாலைகளில் இல்லை காரணம் நாம் இன்னும் பாடசாலையின் சிறிய பிரட்சனைகளுக்குகூட  அரசியல்வாதிகளை எதிர்பார்க்கிறோம் வெளிமாவட்டங்களில் உள்ள கட்டமைப்பொன்று இங்கு இல்லை அரசியல்வாதிகளால் பாடசாலைக்கு தேவையான வசதிகளை பெற்றுதர முடியும் அவ்வசதிகளை முழுமையாக மாணவர்களிடம் சேர்கின்ற பொறுப்பு பாடசாலை நிர்வாகத்திடமே உள்ளது ஆசிரியர்களின் வழிகாட்டலில் சிறந்த மாணவனாக உருவாவது மாணவர்களின் கடமை சிறந்த மாணவர்களாக உருவாக்குபவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் மூலம் பாடசாலையின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் இவ்வாறான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும் போது எமது பாடசாலைகளும் தேசிய ரீதியில் பிரபல்யம் அடையும்

இறுதியாக இக்கட்டடத்தை இப்பாடசாலைக்கு பெற்றுத்தர உதவிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மாகாணசபை உறுப்பினர் லாகிர் மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம்பிரதி திட்ட பணிப்பாளார்  உவைஸ் மூதூர் கல்விப் பணிமனையின் முன்னால் கல்விப் பணிப்பாளர் அகிலா  தற்போதைய மூதூர் கல்விப் பணிமனையின் கல்விப் பணிப்பாளர் மன்சூர் கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேகுணவர்த்தன ஆகிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.
-எப்.முபாரக்-
Previous Post Next Post