கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 8.6.2016 மதியம் 11.00 மணியளவில் திருகோணமலை உவர்மலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு மன் கந்தளாய் வான்எல ஸ்ரீ கனிஸ்ட வித்தியாலய பெற்றோர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பாடசாலையில் 386 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் இவர்களுக்கு 13 ஆசிரியர்கள் தேவையாக உள்ளது ஆனால் தற்போது  6 ஆசிரியர்கள் மாத்திரமே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட வருகின்றனர்.

மேலும் 4ம் அண்டு ஆசிரியர் தற்போது பிரசவ விடுமுறையில் சென்ற போதும் கடந்த 2 மாத காலமாக பதில் ஆசிரியர் நியமிக்காத நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் சம்மந்தமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்கள் பிரசவ விடுமுறையில் சென்ற ஆசிரியருக்கு பதிலீட்டு அசிரியரை மூன்று தினங்களக்கள் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த அர்ப்பாட்டக் காரர்கள் கலைநது; சென்றனர்.
-சேனையூர்  நிருபர்-
Previous Post Next Post