பிரித்தானியாவில் அம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியத்தினால் கோமாவில் பெண்

பிரித்தானியாவில் உயிருக்கு போராடிய பெண்ணை மது போதையில் இருப்பதாக அம்புலன்ஸ் சேவையின் மருத்துவ ஊழியர்கள் அலட்சியப்படுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தாயான 33 வயதான கிளாரி, நியூகாசில் பகுதியில் இரவு விருந்து ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிய பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சகோதரி உடனடியாக அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை விடுத்துள்ளார். இந்நிலையில், எனினும், மருத்துவ ஊழியர்கள் அவர் மது போதையில் இருப்பதாகவும், அவரை தூங்க வைக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

எனினும், அவருடைய உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவரது சகோதரி மீண்டும் அவசர சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுமார் ஒன்பதரை மணித்தியாலங்களின் பின்னரே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களின் பின்னர் கோமா நிலைக்கு சென்ற அவருக்கு மீண்டும் நினைவு திரும்புவது கடினம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைவதற்கு அம்புலன்ஸ் சேவை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
-jvpn-
Previous Post Next Post