லக்கி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பும் அணிகளை நிரல்படுத்தலும்

50 வது ஆண்டு நிறைவில் லக்கி விளையாட்டுக் கழகம் நடாத்தும் SPORTS FOR MEMORIES நிகழ்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும் கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான அணிகளை நிரல்படுத்தலும் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் மிசாரி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் வை.எல்.பாயிஸ் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் கிரிக்கட் அணிகளின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், லக்கி விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Previous Post Next Post