அக்ஸா அபிவிருத்தி ஒன்றியத்தின் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி-2016

அக்ஸா அபிவிருத்தி ஒன்றியத்தின் மாபெரும் கிரிக்கட்  சுற்றுப்போட்டி2016-04-13 அன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக மூன்று  தினங்கள் நடைபெற்றது .
அக்ஸா அபிவிருத்தி ஒன்றியத்தின் (ADF)ஏற்பாட்டில்  தலைவர் MH.ஜமாஹீம் இன் தலைமையில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பத்து அணிகள் பங்கு கொண்டது.

பங்கு கொண்ட பத்து அணிகளையும் பத்து பேர் ஏலத்தில் எடுத்து விளையாட்டை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(விபரம் கீழே)

கலந்துகொண்ட பத்து அணிகளிலும் இறுதிச்சுற்றுக்கு  ADF Tigers அணியும்   ADF Warriors அணியும் தெரிவாகியிருந்தது .

இறுதிச்சுற்றுக்கு தெரிவான இரு அணிகளும்  ADF Premier LEAGUE 2016 க்கான கிண்ணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று பின்னர் அல் அக்ஸா மைதானத்துக்கு கொண்டுவந்ததுடன் இறுதிச்சுற்று மூன்றாவது தினமான 2016.04.15 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இப் போட்டியில் ADF Warriors அணியினரின் அபார ஆட்டத்தினால் ADF Tigers ஐ தோற்கடித்து  ADF Premier LEAGUE 2016 க்கான கிண்ணத்தை ADF Warriors தனதாக்கிக்கொண்டனர் .
இந்த நிகழ்வை ,
பொத்துவில் பிரதேச சபையின் பிரதேச  செயலாளர் NMM.முசர்ரத்  , பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளர் MS.அப்துல் வாசித் ,முன்னாள்  பிரதேச சபை உறுபினர்களான A.பதுர்கான் ,MM.முபாரக்
அல் அக்ஸா பாடசாலையின் முன்னாள் அதிபர் MACM.ரஹ்மத்துல்லாஹ் , பொத்துவில் உலமா சபையின் தலைவர் மற்றும் சின்ன உல்லை பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-ஊடகப்பிரிவு-
Previous Post Next Post