சுகாதார சேவைகளுக்கு 2500 பில்லியன் நிதி ஒதுக்கீடு

2016 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 2500 பில்லியன் ரூபா பணத்தினை அரசாங்கம் சுகாதார சேவைகளுக்கு வழங்குகின்றது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுத்தின் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு 6 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இவ்வாறு ஒதுக்கப்படுகின்ற நிதியில் 80 சத வீதமான ரூபாய்கள் வைத்தியசாலையின் கட்டிடத்தேவைகளுக்காகவும், 20 சத வீதமான ரூபாய்கள் வைத்திய செலவீனங்களுக்காகவும் இந்த நிதிகள் செலவிடப்படுகின்றதது.

அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு ஏன் இவ்வளவு பெரும் தொகைப் பணங்களை செலவிடுகின்றது தெரியுமா? மக்களின் சுகாதாரத்தையும் நாட்டில் வாழுங்கின்றவர்கள் அனைவரும்  சுகாதாரத்துடன் சந்தோஷமாக வாழவேண்டும் என்று கருத்திற்கொண்டுதான் இந்த பெரும்தொகைப் பணங்களை செலவிடுகின்றது.

நாட்டையும், மக்களையும் சுகாதாரத்துடன் வாழ வைக்கின்ற பாதுகாக்கின்ற பாரிய பொறுப்புக்கள் வைத்தியர்களுக்கும் வைத்தியத்துறை சார்ந்தவர்களுக்கும் உள்ளது என்று கூறினார்.

இவ்வாறான நிதிகளை வழங்கி வைக்க காரணகருத்தாக இருந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல். முஹம்மட் நஸீரின் செயற்பாடுகளை நான் பாராட்டுகின்றேன் என்றார்.
-அபு அலா-
Previous Post Next Post