ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு இளைஞர் காங்கிரசை மீட்டுத்தருமா?

இலங்கை அரசியலில் முஸ்லீம்களின் இருப்பு கேள்விக்குறியாகக் காணப்பட்ட போது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் கடின முயற்சியும் இறை உதவியும் இரண்டரக்கலந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் பேரியக்கம் காத்தான்குடியில் உருவாகி குறித்த சில வருடங்களிலே முஸ்லீம்களின் தேசிய அரசியல் கட்சியாக முடிசூடிக்கொண்ட பெருமை பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கின்ற வரலாறாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மட்டுமே கட்சிப் போராளிகள் என்ற சொற்பதம் கொண்டு அழைக்கப்படுகின்றமை கட்சி வழர்ச்சியின் தாரகை மந்திரம் தியாகம் என்பது கோடிட்டுக் காட்டப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாகிய இந்த மரம் ஏழைத் தாய்மார்களின் கண்ணீர் நீராகப் பாய்ச்சப்பட்டு பல்லாயிரக்கணக்கான இளம் போராளிகளின் உயிர்கள் புதைக்கப்பட்ட அல்ல விதைக்கப்பட்ட கதையின் சாட்சியம் என்பதை மறுப்பவர்தான் யார்?

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் இவ் உண்மையை அறிந்து வைத்திருந்ததால் தான் கட்சியின் கட்டமைப்பில் மகளிர் அணி அது போன்று இளைஞர் காங்கிரஸையும் உருவாக்கி  இளைஞர்களையும் அரசியல் நீரோட்டத்தோடு இணைத்து உரிமைக்கான போராட்டத்தில் பங்காளிகளாக இளைஞர்களும் மாற வழிசமைத்துக் கொடுத்தார்.

ஆனால் இன்று மரத்தின் இளம் விதைகள் மயிலுக்கும் குயிலுக்கும் இறையாக்கப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளம் படையணி ஆட்டம் கண்டிருக்கின்றமையினை எண்ணிப்பார்க்கையில் எம் மக்களின் உரிமைக் குரலும் ஆட்டம் கண்டிருப்பதாய் ஓர் உணர்வலை இப் போராளியின் மனதில்.

2015ம் ஆண்டின் பொதுத் தேர்தல் முடிவுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீழ்ச்சியினை சுட்டிக்காட்டுகின்ற சமிஞ்சை விளக்குகளாக ஒளிர விடப்பட்டிருக்கின்றது.

எனவே இக்கட்சியினுடைய வளர்ச்சி என்பது வெறுமனே உயர் பீடத்தின் முடிவில் மாத்திரம் தங்கியிருக்கின்ற ஒன்றல்ல. மாறாக இளம் போராளிகளின் கடின உழைப்பின் மூலமாக பெறப்படுகின்ற ஒன்றுதான் என்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய ஆரம்ப வரலாற்று வளர்ச்சிக் காலம் சிறந்ததொரு உதாரணமாகும்.

இக் கட்சியினது இளம் போராளிகள் என்ற வகையில் தலைமைத்துவத்திடம் கேட்பதெல்லாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 07 ம் திகதி இடம் பெறுகின்ற பேராளர் மாநாட்டிலிருந்தாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளம் போராளிப்படை வீருநடை போட சிறப்பான இளைஞர் அணியின் மீள் உருவாக்கத்திற்கு ஏற்றாட் போல்  கட்சியின் வளர்ச்சியினை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படக்கூடிய சிறந்த தேசியஇ மாவட்டஇ பிரதேச மட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களை நியமித்து இலங்கை வாழ் முஸ்லீம்களின் ஏக சொத்தாகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல இளைஞர்களையும் பங்காளிகளாக மாற்றுங்கள் என்ற வேண்டுகோளோடு என் பேனாவிற்கு வைக்கப்படுகின்றது தற்காலிக முற்றுப்புள்ளி.

-சிபாஸ் நஸார்-
Previous Post Next Post