பொத்துவில் கரைவலை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு-பிரதி அமைச்சரின் அதிரடி

பொத்துவிலில் சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி கரைவலை மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள்  மீன்பிடிப்பரிசோதகர்கள் மற்றும் பொத்துவில் பொலிசாரினால்  கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு கரைவலை போடுவதை தடைசெய்யப்பட்டது.
இவ்வாறு 20 வருடகாலமாக ஈடு பட்டு பல இன்னல்களை அனுபவித்த பொத்துவில் ஜலால்தீன் சதுக்க மீனவர்கள் அமைச்சர் பைசல் காசீமின் இனைப்பதிகாரி அப்துல் றஹீமின் ஊடாக‌ பிரதி சுகாதர பிரதி அமைச்சர் பைசல் காசிமை சந்தித்தத்தோடு பிரதி அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் மீனவ அமைச்சில் விசேட கூட்டமும் இன்று ஏற்படு செய்யப்பட்டது.

 பாதிக்கப்பட்ட ஜலால்தீன் சதுக்க மீன‌வர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த
மீனவ அமைச்சர் தொடர்ந்தும்  மீன்பிடிக்க அனுமதி வழங்கியதோடு மீன்பிடி
பரிசோதர்களுக்கும் பொலிஸ் தினைக்களத்திற்கும் தொலைபேசி மூலம்
அமைச்சரினால் உத்தரவு வழங்கப்பட்டு இருக்கின்றது. அத்தோடு எதிர் வரும்
காலங்களில் பாராளுமன்ற அனுமதி பெற்று கொடுப்பதாகவும் மீன்பிடித்துறை
அமைச்சர் உறுதியளித்து இருக்கின்றார்

பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் வினவியபோது மகிழ்ச்சியோடு இவ்வனுமதியை பெற்றுக்கொடுத்த பிரதி அமைச்சர் பைசல் காசிமிற்கும் அவரின் இனைப்பதிகாரி அப்துல் றஹீமிற்கும் நன்றி  தெரிவித்தனர்,
-மக்சூத் முஹம்மட் றம்ஸான்-

Previous Post Next Post