Top News

மனிதனைப் போலவே சிகரெட்டை புகைக்கும் 20 வயது சிம்பன்சி

உயிரியல் பூங்காக்களில் இருக்கும் விலங்குகள் மனிதனைப் போல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவது தொடர்ந்து வருகிறது. கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளிடம் பார்வையாளர்கள் சிகரெட் கொடுத்து புகைக்க வைத்து அதை வீடியோவாக பதிவுசெய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வட-மேற்கு சீனாவில், இருக்கும் ஸின்ஜியாங் நகரில் உள்ள டியான்ஷான் உயிரியல் பூங்காவில், சமீபத்தில் 20 வயது ஜியா கு சிம்பன்சி குரங்கு மிக இயல்பாக புகைத்துள்ளது. இது கடந்த 2012-ம் ஆண்டு பீஜிங் நகரத்திலிருந்து இந்த உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆகவே, இந்தப் பழக்கத்தை அங்கேயே கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த சிம்பன்சி குரங்கு ஒரு கையில் சிகரெட்டும், மறு கையில் டின் பீர் வைத்துக் குடித்துக் கொண்டிருந்ததாகவும், ஒரு சிகரெட் முடிவதற்குள்ளாகவே அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளரிடம் இருந்து இன்னொரு சிகரெட்டை எடுத்துக் கொண்டதாம்.

அதுமட்டுமின்றி, மனிதர்கள் சிகரெட்டைப் பற்ற வைப்பது போலவே பழைய சிகரெட்டால் புது சிகரெட்டை புகைப்பது, காலங்காலமாக சிகரெட் புகைப்பவரைப் போலவே உள்ளது.

ஏற்கனவே, ரஷ்ய உயிரியல் பூங்காவில் சிம்பன்சி புகைக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதையறிந்த உயிரியல் பூங்கா நிர்வாகம் உடனடியாக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்ட அந்த சிம்பன்சியை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பினர்.

மனிதர்கள் தாங்கள் கெட்டது போதாதென விலங்குகளையும் தம்மைப்போலவே மாற்றிவருவது அவமானத்துக்குரிய விஷயமாகும்.

Asar mohammed - www.fastlanka.lk
Previous Post Next Post