அண்ணன் தம்பியாக இரட்டை வேடத்தில் முதல்முறையாக தனுஷ்!

கமர்ஷியல் ஹிட் இல்லையென்றாலும் மாரி போட்ட முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுக்கு ஓடியது.
முந்தைய படமான அனேகன் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் தோல்விப்படமானது. எனினும் தனுஷ் மார்கெட்டுக்கு பிரச்சினையெதுவும் இல்லை. தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.


இவைகளில் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் விஐபி 2 என சொல்லப்படும் படம் எறக்குறைய முடிவடையும்நிலையில் உள்ளது. எமி ஜாக்ஸனும், சமந்தாவும் தனுஷுக்கு இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில், ஓடும் ரயிலில் சப்ளையராக பணியாற்றுபவராக தனுஷ் நடிக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்காக மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் ரயில்பெட்டிகள், பிளாட்பாரம் செட் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மூன்றாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் வடசென்னை படத்தில் நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்ற வருடக்கணக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு முன்னதாக, எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களின் இயக்குநர் ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

அக்டோபரில் துவங்கவிருக்கும் இந்த ஆக்ஷன், த்ரில்லர் படத்தில் அண்ணன், தம்பியாக இரட்டை வேடத்தில் முதல்முறையாக நடிக்கிறார் தனுஷ்.

Asar mohammed - www.fastlanka.lk
Previous Post Next Post