காவலூரில் காவலரன்கள்-கவிதை

காவலூரில் காவலரன்கள்
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

ஊர்களைக் காத்திட்ட
ஊரது என்னூர்
கடலது கொஞ்சிடும்
கரையது என்னூர்
எழிலது குறையாத
புகழ் கொண்ட என்னூர்
கண்கொண்டு பார்த்திட
மனங்கோண என்னூர்
பயன்தரு பனையும்
கடல்வள உணவும்
ஏராளம் ஏராளம்
இடரது வந்து
படையது குடிகொண்டமையால்
பண்ணைப் பாலம் தொடங்கி
என் வீட்டுத்திண்ணை வரை
காவலரன்கள் நீண்டுற்று.

எழில்மிகு என்னூரில்
எட்டப்பன் கிடையாது-ஆனால்
குட்டிச் சாத்தானுகள் நிறைய உண்டு
விட்டு விட்டு ஓடிய வீடுகளும்
கலைமிகு கட்டிடமும்
காவலரனாய் மாறி
ஊரெல்லாம் முற்புதர்களாயிற்று

காகமும் கட்டாக்காலி நாய்களும்
காவலரன் முன் படுத்துறங்களாயிற்று 
என் ஊரதை 
தம் பெயர் முன் இட்டவர்
உச்சம் தொடலாயிற்று
என்னூர் மட்டும் மறைவாய் 
காவலரன்களுக்கு மத்தியில்.......
-காவலூர் அகிலன்.கிளிநொச்சியிலிருந்து.-
Previous Post Next Post