Top News

சாய்ந்தமருதைச் சேர்ந்த பொல்லடி ஆதம்பாவா 'முதுகலைஞர் விருது' வழங்கி கௌரவிப்பு

சாய்ந்தமருது தக்வா கோலாட்ட குழுவின் தலைவர் சேகு அப்துல் காதர் ஆதம்பாவா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பொல்லடி, றபான் மற்றும் நாட்டார் கலைத்துறை என்பவற்றிக்கு ஆற்றிய சேவைக்காக 'முதுகலைஞர் விருது' வழங்கி கௌரவிப்பட்டார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வலர்மதி ரவீந்திரன் உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் சகிதம் கடந்த  (05) செவ்வாய்க்கிழமை அவரது வீடுதேடிச் சென்று பொன்னாடை போர்த்தி, பத்தாயிரம் ரூபா பொற்கிளி என்பவற்றுடன் 'முது கலைஞர் விருது' வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி பத்மராசா, திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் எம்.குணபாலன், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.அம்சத், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.எப்.ஸபீகா உவைஸ் உள்ளிட்ட தக்வா கோலாட்ட குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சேகு அப்துல் காதர் ஆதம்பாவா பொல்லடி, றபான் மற்றும் நாட்டார் கலைத்துறை ஆகியவற்றில் 50 வருடம் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-றியாத் ஏ. மஜீத்-
Previous Post Next Post