உலக முடிவு(World End) தேசிய பூங்காவினுள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 23 இலட்சம் ரூபா தண்டபணமாக பெறப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான உலக முடிவு தேசிய பூங்காவினுள் கடந்த ஒரு வருடத்தினுள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 23 இலட்சம் ரூபா தண்டபணமாக பெறப்பட்டுள்ளது.
இச்சுற்றி வளைப்பின் போது வன விலங்குகளை வேட்டையாடுதல், போதை பொருள் பாவனை,புகைத்தல் மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களுக்கு தீங்கு விளைவித்தல் போன்றவற்றுக்கான தண்ட பணமே இவையாகும் என தெரிய வந்துள்ளது.

இவ்வருடத்தில் முதல் மாத பகுதியில் சுமார் 1 இலட்சம் ரூபா பணம் இவ்வாறான குற்ற செயல் புரிந்தோருக்கு எதிராக அறவிடப்பட்டுள்ளது.

 மேலும் உலக முடிவை பார்வையிட வரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு இது தொடர்பில் முறையான துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலும் இவ்வாறான குற்றசெயல்களில் ஈடுபட்டுள்ளதாக வன விலங்குகள் முகாமையாளரான பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் பூங்காவினை சுற்றி பார்க்க வரும் உல்லாச பயணிகள் குற்றம் இளைக்கப்பட்டு அகப்பட்டால் குற்றவாளிகளுக்கு எதிராக 2009 இலக்க 11ம் சட்டத்தின் கீழ் தண்ட பணம் அறவிடுவதாகவும்,இதற்காக ஆக குறைந்த தண்ட பணமாக 15 ஆயிரம் ரூபா பணம் அறவிடப்படும்.

ஆகையால் இந்த உலக முடிவில் பூங்கா எழிலுடன் திகல அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதனை விடுத்து தகாத செயல்களில் ஈடுபட்டால் எதிர்வரும் காலங்களில் அடுத்த சந்ததியினர் பூங்காவை இரசிக்கும் வாய்ப்பு கிடைக்காது போவதுடன்,உலக அதிசயங்களில் ஒன்றாக கருதபடாது போகும் நிலை ஏற்படும் என வன முகாமையாளர் பிரதீபன் கூறினார்.
-VK-
Previous Post Next Post