Top News

உலகின் மிக நீளமான கடல் மேலான பாலம் சீனாவில் திறந்து வைப்பு

சீன ஜனாதிபதி எக்சி ஜிங்கபின்க் தலைமையில் உலகின் மிக நீளமான கடல் பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன் நீளம் சுமார் 55 கிலோ மீற்றர் ஆகும், இதனை அமைப்பதட்கு 9 ஆண்டுகள் செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் கட்டுமானப்பணிக்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது

சீனா வின் முக்கிய மூன்று நகரங்களை இணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த பாலத்திட்காக 4 இலட்சம் டொன் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த அளவு உலோகம்  60 ஈபெல் கோபுரங்களை அமைப்பதட்கு போதுமானது என தெரிவிக்கப்படுகிறது

இந்த பாலத்தின் நிர்மாணத்தின் போது 18 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post