இறக்காமப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திறற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அரசியல் நோக்கத்திற்காக வேறு பிரதேசங்களுக்கு மாற்றம் செய்தார் - கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை

இறக்காமப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வாங்காமம், இலுக்குசசேனை கிராமங்களின் வாழ்வாதார பொருளாதார அபிவிருத்திக்காக 33மில்லியன் மாகாண சபை நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக 200 பேருக்கான கால்நடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 40பேருக்கு கால்நடைகள் வழங்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தினை அரசியல் காரணங்களுக்காக இடைநிறுத்தி வேறு பிரதேசங்களுக்கு முன்னள் முதலமைச்சர் மாற்றம் செய்தார் என வறப்பத்தான்சேனை மஜீத் புறத்தில் இறக்காம பிரதேச சபையில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சபீர்கான தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வரும் முஸ்லிம் காங்கிரஸ் நமது மக்களின் நலனில் அக்கறையில்லாமல் செயற்படுவதுடன் அம்பாறை மாவட்டத்தில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதார பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியினைக் கூட மனிதாபிமானமற்ற முறையில் அரசியல் நோக்கங்களை இலக்காக் கொண்டு நிறுத்தி விட்டு கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என வெளியில் தெரிவித்துக் கொண்டு தனிக்கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர். அதன் விளைவுகளை கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் அறிந்து கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சரால் அரசியல் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட வாங்காமம் கிராம அபிவிருத்தித் திட்டம் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான பணிப்புரைகள் கிழக்கு மாகாண ஆளுனரால் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விஷேட திட்டத்தின் கீழ் இறக்காமப் பிரதேசத்தில் பின்தங்கிய மக்கள் வாழும் பிரதேசங்களான மஜீத்புரம், குடுவில், இறக்காமம்-08 பிரதேசங்கள் அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Previous Post Next Post