(வீடியோ).,சாட்டோ மன்சூர் கணக்கறிஞர் றியாழினை விமர்சித்த கூட்டத்தில் முதலமைச்சர் நசீர் அஹமட், சிப்லி, ஹமீட் உரையாற்றியது என்ன?

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியானது உள்ளிருப்பவர்களை எவ்வாறு இணைத்துகொண்டு செயல்படுகின்றதோ அவ்வாறே வெளியில் இருக்கின்றவர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படும் கட்சியாக இருக்கின்றது. அதே போல் கல்குடாவில் அமைப்பாளராக இருக்கும் கணக்கறிஞர் றியால் கூட எமது கட்சிக்கும் எமக்கும் பெரும் பலமாகவே பார்க்கப்படுகின்றார்.

கணக்கறிஞர் றியாழ் ஒரு திறமையான கணக்காளர். அதிலும் முக்கியமாக அவருடைய துறையிலே மிகத்திறமையுடன் பங்காற்றக்கூடிய ஒருவராக காணப்படுகின்றார். அரசியல் என்று கூறப்படும் விடயத்தில் பல வகையான திறமைகளை கொண்டவர்கள் காணப்படுவார்கள். அதே போல் றியாழ் என்பவர் எமது கட்சிக்கும் எமக்கும் தேவையான திறமைமிக்கவராகவே பார்க்கின்றோம். அவ்வாறான திறமைகளை எமது கட்சியின் மூலமாக கல்குடாவிற்கும் முழு சமூகத்திற்கும் எவ்வாறு பாவிப்பது என்பதைப்பற்றி நாங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது.

ஆகவே எந்த பிரிவினையினையும் நாங்கள் ஏற்படுத்திக்கொண்டு செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. எல்லோரும் ஒற்றுமைபட்டவர்களாகவே எமது அரசியல் பயணத்தினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய கடமைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். அதையே எமது தேசிய தலைவர் அப்துர் ரவூப் ஹக்கிமும் எமக்கு அடிக்கடி கூறி வருக்கின்றார். மிக விரைவில் நான் அமைப்பாளர் றியாழுடன் கலந்துரையாடி எல்லாவற்றுக்குமான சுமூகமான தீர்வினை முன்னெடுக்க உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை பாசிக்குடவில் கணக்கறிஞர் றியாழினை சாட்டோ மன்சூர் விமர்சித்த கூட்டத்தில் கிழக்கின் முதலமைச்சர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

மேலும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் விரிவான உரையுடன் மாகாணசபை உறுப்பினர் அல்-ஹாஜ் ஷிப்லி பாரூக், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோர்களின் சுருக்கமான உரைகளினுடைய காணொளியும் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

Previous Post Next Post