Top News

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்ட அங்குரர்ப்பண ஆரம்ப நிகழ்வு – பொத்துவில்

பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்ட அங்குரர்ப்பண நிகழ்வு இன்று பொத்துவில் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொத்துவில் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள ஒரு கிராமப் பகுதிக்கு 01மில்லியன் ருபா வீதம் 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ்வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்று பொத்துவில் 27 றசாக் மௌலானா நகரிலுள்ள எம்.எல்.வாத்தியார் வீதியனை கொங்கிறீட் இடுவதற்கான அங்குரர்ப்பண நிகழ்வு அப்பகுதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்.எம்.பீ.ஜெம்சீத் தலமையில் இடம்பெற்றது.






இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், கிராம நிலதாரிகள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அப்பகுதி அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
Previous Post Next Post