36 மில்லியன் நிதியின் மாவட்ட வைத்தியசாலை மற்றும் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் 36 மில்லியன்  நிதியொதுக்கீட்டின் சம்பூர் மாவட்ட வைத்தியசாலைக்கும், வைத்தியர் விடுதி மற்றும் தாதியர் விடுதிக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (27) மாலை இடம்பெற்றது.

திருகோணமலை பிராந்தியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனுசியா ராஜ்மோகன் தலையில் இடம் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

சம்பூர் மாவட்ட வைத்தியசாலை கட்டிட நிர்மாணப் பணிக்காக 26 மில்லியன் ரூபாவும் வைத்தியர் விடுதி மற்றும் தாதியர் விடுதி கட்டிட நிர்மானப் பணிக்காக 10 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிட வேலைகள் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கூறினார்.
மேலும் இந்நிழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுதீன், சுகாதார மாகாணப் பணிப்பாளர் கே.முருகானந்தன், நிருவாக பிரதி சுகாதார மாகாணப் பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில் மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

-அபு அலா -
Previous Post Next Post