நிந்தவூர் கிரான் கோமாரி விவசாயிகளின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு

கோமாரியில் அமைந்துள்ள 146 முஸ்லிம் விவசாயிகளுடைய காணி பிரச்சினைகள் தொடர்பில் குறித்த விவசாயிகள் கடந்த 1980 ஆண்டுளில் இருந்து அவர்களது காணிகளுக்கு உட்செல்ல முடியாமல் கடந்த முப்பது வருடங்களாக கையிழந்து, 1954 ஆம் ஆண்டில் அரசினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தின் மூலம் செய்து வந்த காணிகளை கையிழந்து அல்லப்பட்டு வருகின்ற இச் சந்தர்ப்பத்தில், அவர்களது பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் கிரான் கோமாரி விவசாயிகள் அமைப்பினுடைய பிரதிநிதிகளுக்கும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கும் இடையேயான சந்திப்பு, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான  ஆரிப் சம்சுடீன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் றவூப் ஹக்கீம், உடனடியாக அம்பாறை மாவட்டச் செயலாளருடன் வருகின்ற ஜூலை 15 அல்லது 16 ஆம் திகதிகளில் ஒரு சந்திப்பை ஏற்ப்படுத்தி இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை பெற்றுக் கொள்வதற்க்கும், இது தொடர்பில் ஏலவே பாராளுமன்ற பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவில் இருந்து செய்யப்பட்ட முடிவுகளையும், பாராளுமன்ற நிறுவாகதிற்க்கான ஆணையாளரினால் இது தொடர்பில் செய்யப்பட்ட்ட விசாரணைகளுக்கான அறிக்கையையும் பெற்றுக் கொண்டு, இந்த நல்லாட்சியின் ஆட்சிக்காலதினை பயன்படுத்தி உடனடியாக உடனடியாக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைச்சர்  உடனடியாக வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனை பணித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பின் போது கிரான் கோமாரி பாமஸ் விவசாய அமைப்பினுடைய தலைவர் உமர் மற்றும் அதனுடைய பிரதிநிதி ஜப்பாறும் கலந்துகொண்டார்கள்.
-எம்.வை.அமீர்-
Previous Post Next Post